Advertisement

சுளுக்கு குணமாக பாட்டி வைத்தியம்

சுளுக்கு குணமாக பாட்டி வைத்தியம்

சுளுக்கு என்பது குழந்தை முதல் பெயவர்கள் வரை பலருக்கு ஏற்படுகிறது. இது குறிப்பாக உடலளவில் அதிகம் வேலை செய்பவர்கள் அதிகம் விளையாடுபவர்களுக்கு ஏற்படுகிறது. கழுத்து சுளுக்கு, கால் சுளுக்கு, முதுகு சுளுக்கு இப்படி மொத்தம் 44 வகை சுளுக்கு உள்ளன. நரம்புகளின் தசை நாறுகள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு. ஆனால் தசை நாறுகள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும். சாதாரண சுளுக்கு சரியாக பாட்டி வைத்தியம்குறிப்புக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

suluku treatment

குறிப்பு 1 :

சுளுக்கு நீங்க ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது. ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும். பிறகு அதை வெதுவெதுப்பாகும்வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும். ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.


குறிப்பு 2 :

பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் சுளுக்கு சரியாகும்.

Garlic(Poondu)

குறிப்பு 3 :

பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.

குறிப்பு 4 :

முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து, இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

Kadugu

குறிப்பு 5 :

கையில் சுளுக்குள்ளவர்கள், கற்ப்பூரத்தையும் மிளகு தூளையும் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து கையில் எந்த இடத்தில் சுளுக்கு உள்ளதோ அங்கு போடலாம்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சுளுக்கை குணப்படுத்தலாம்.