ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக டிப்ஸ்
நம்மில் பலர் எப்படி குண்டாக இருந்து கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறோமோ அதே போல ஒல்லியாக இருக்கும் சிலர் குண்டாக மாற முயற்சி செய்கின்றனர். சிலர் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பதுண்டு. குழந்தை பருவம் முதல் வளர்ந்து பெரியவர்கள் ஆனபோதிலும் சிலர் ஒல்லியாக இருப்பதுண்டு. இப்படி எப்போதும் ஒல்லியாக இருப்பவர்கள் கொண்டாக மாற சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
உடல் எடையை அதிகரிக்க எள்ளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நொறுக்கு தீனியை அதிகம் உண்பவர்கள் எள் சமந்தமானதை அதிகம் வாங்கி உண்ணலாம். எள்ளுப்பொடி போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி எள்ளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். இதனால் விரைவில் சதை பிடித்து குண்டாக மாறலாம்.
குறிப்பு 2 :
வாழை பழத்தை அதிகம் உண்பதன் மூலம் உடல் எடையை கூட்டலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை தேனோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். சிறுவர்களுக்கும் இதை கொடுக்கலாம்.
குறிப்பு 3:
50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொண்டு அதை நன்கு வேக வைத்து அதோடு தேவைக்கு ஏற்ப நெய் மற்றும் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஓர் இரு மாதத்தில் உடல் எடை அதிகரித்து குண்டாக மாற முடியும்.
குறிப்பு 4 :
உடல் எடை அதிகரிக்க தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டை சாப்பிடலாம். அதேபோல தினமும் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை அதிகரித்து. வேர்கடலையால் ஆன தின்பண்டங்களையும் சாப்பிடலாம். இதன் மூலம் எளிதில் குண்டாக மாற முடியும்.
குறிப்பு 5 :
தினமும் 10 முதல் 15 பச்சை கொண்டாய் கடலையை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில வாரங்களில் குண்டாக முடியும்.
குறிப்பு 6 :
உருளை கிழங்கை வேக வைத்து தினமும் உண்ணலாம். அதே போல உணவில் தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் படிப்படியாக குண்டாக முடியும்.
மேலே கூறிய குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உடல் எடையை விரைவில் அதிகரித்து குண்டாக மாற முடியும்.