Advertisement

கம்பு பயன்கள்

கம்பு பயன்கள்

அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்களாக இருக்கின்றன. இவை போலவே பல சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் “கம்பு”. இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். கம்பு உணவாக உட்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Kambu bnefits in Tamil

கம்பு பயன்கள்

உடல் பலம்

கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும். இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்கும்.

நீரிழிவு

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றை சாப்பிடமுடியாது. அந்த அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.

Kambu bnefits in Tamil

நோய் எதிர்ப்பு

சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.

நார்சத்து

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும்.

உடல் எடை குறைப்பு

பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடிவிடுகிறது. இவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்து, இவர்களின் உடல் எடையை குறைக்கும்.

குடல் புற்று

இன்றைய காலங்களில் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இளமை தோற்றம்

கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.

Kambu bnefits in Tamil

தாய்ப்பால் சுரப்பு

புதிதாக குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும் அல்லது நின்றுவிடும். இந்த தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின் போது சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

Period pain

ரத்த கொதிப்பு

கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

முடிகொட்டுதல்

இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தலைமுடி கொட்டுதல் ஆகும். முடி நன்கு தழைத்து வளர “கெராட்டீன்” எனும் புரதம் அவசியம். இது கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும்.

உடல் சூடு

சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.