Advertisement

நாட்டு சக்கரை நன்மைகள்

நாட்டு சக்கரை நன்மைகள்

மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”. இந்த நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

Nattu Sakkarai

நாட்டு சக்கரை நன்மைகள்

ரத்த சுத்தி

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.

கொழுப்பு

உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Nattu Sakkarai

மலச்சிக்கல்

பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.

Nattu Sakkarai

நீரிழிவு நோய்

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

Nattu Sakkarai

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.

Nattu Sakkarai

புற்று நோய்

கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.