பிளாக் டீ பயன்கள்
உடல் ஆரோக்கியமாகவும், பலம் மிகுந்ததாகவும் இருப்பதற்கும் பல விதமான உணவுகளை சாப்பிடுகிறோம். உணவுகள் எந்த அளவிற்கு சாப்பிடுகிறோமோ உடலுக்கு நலத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் சில வகையான பானங்களையும் அருந்துகின்றோம். அப்படி உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பிளாக் டீ பயன்கள்
தோல் புற்று
சூரியன் ஒளியில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்கள் அதிகநேரம் நமது தோலில் பட்டு, அது நமது உடலின் செய்யும் செல் மாறுதல்களால் நம்மில் பலருக்கு தோலில் நிறம் மாறுதல் மற்றும் தோல் புற்று நோய் போன்றவவை ஏற்படுகிறது. பிளாக் டீ தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு, அதில் இருக்கும் நன்மை செய்யும் ரசாயனங்கள் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் நிறம்மாறுதல் மற்றும் தோல் புற்று நோய் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
தலைமுடி
நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
வயிற்று போக்கு
சில வகை நோய்களாலும், சாப்பிட்ட உணவு நஞ்சாகிப்போனதாலும் சிலர் கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இச்சமயங்களில் இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.
சுறுசுறுப்பு
பல மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி பிளாக் டீ மூளையை புத்துணர்ச்சி பெற செய்து உடலும், மனமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்வதில் ஆற்றல் கொண்டிருப்பதாக கண்டறிந்துள்ளனர். இளம் வயதினர் முதல் அனைத்து வயதினரும் பிளாக் டீ அருந்தி வந்த போது அவர்களின் பார்வை, கேட்கும் திறன் மற்றும் கவனிக்கும் திறன் போன்றவை மிகுந்த விழுப்புணர்வுடன் செயல்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அல்சைமர் நோய்
அல்சைமர் நோய் என்பது வயதான நபர்களில் சிலருக்கு ஞாபகத்திறன் குறைவு, சிந்திக்கும் ஆற்றல் இழப்பது போன்றவற்றை குறிக்கும் ஒரு நோயாகும்.வயதானவர்கள் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வரும் போது அதிலிருக்கும் மூளையை புத்துணர்ச்சியடையச் செய்யும் ரசாயனங்கள் மூளை செல்களை அதிகம் தூண்டி தெளிவாக சிந்திக்கும் ஆற்றலையும், சிறந்த ஞாபக சக்தியையும் வயதானவர்களுக்கு கொடுக்கிறது.
உடல் எடை
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
மலச்சிக்கல்
தினந்தோறும் இருமுறை மலம் கழிப்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அறிகுறியாகும். ஆனால் இன்று பலரும் தவறான உணவு பழக்கங்களால் ஒரு முறை மலம் கழிப்பதில் கூட சிக்கல் ஏற்படுகிறது. கடுமையான மலச்சிக்கலால் அவதி படுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.
சர்க்கரை வியாதி
உலகெங்கும் சில ஆண்டுகளில் சர்க்கரை வியாதி பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாக் டீயில் “காட்ச்சின் மற்றும் தியப்பிளவின்” என்கிற நன்மை செய்யும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் பிளாக் டீ அதிகம் அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதயம்
பிளாக் டீயில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை உடலின் ரத்தத்தில் அதிகம் படிய விடாமல் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு ரத்தநாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதை தடுத்து உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக கிடைக்க பெற்று, இதயத்தை பலப்படுத்தி, இதய நோய்கள் வற்றாமல் தடுக்கும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் சிலருக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும் ஒரு நுரையீரல் சம்பந்தமான வியாதியாகும். இந்நோய் இருப்பவர்களுக்கு சமயங்களில் அவர்களின் நுரையீரல்களில் இருக்கும் சுவாசக்குழாய்கள் அதிகம் வீங்கி சீரக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அச்சமயங்களில் சூடான பிளாக் டீ அருந்தி வந்தால் நுரையீரல் சீராகி மீண்டும் இயல்பாக சுவாசிக்கும் நிலையை பெறலாம்.