Advertisement

அன்றாட உணவில் மஞ்சள் சேர்ப்பதால் உண்டாகும் அற்புதமான உடல்நல பயன்கள் இதோ

அன்றாட உணவில் மஞ்சள் சேர்ப்பதால் உண்டாகும் அற்புதமான உடல்நல பயன்கள் இதோ

பூமிக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகள் பல இருக்கின்றன. அதில் உணவுக்கு சுவை கூட்டவும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகையாக மஞ்சள் இருக்கிறது. வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற மஞ்சள் கிழங்கு செடிக்கு குளிர்பிரதேச நாடான அமெரிக்கா காப்புரிமை வாங்கிக்கொண்டு மற்ற நாடுகளிடம் காப்புரிமை சட்டத்தின் பெயரால் அராஜகம் செய்தது. அதற்கு இந்தியா தக்க சான்றுகளுடன் மஞ்சள் கிழங்கு இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தது என எடுத்துரைத்து, அமெரிக்காவின் மஞ்சள் கிழங்கிற்காண காப்புரிமை சட்டத்தை ரத்து செய்த சம்பவம் இங்கே பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்படி நம்மிடம் இருக்கின்ற அற்புதமான இந்த மஞ்சள் செடியின் மகத்துவத்தை வெளிநாடுகள் அறிந்து கொண்ட அளவிற்கு கூட நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட மஞ்சள் உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

turmeric

மஞ்சள் பயன்கள்

தேவையற்ற முடிகள்

பெண்கள் சிலருக்கு ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாறுபாடுகள் முகத்தில் தேவையற்ற ரோம முளைக்கிறது. இத்தகைய ரோமங்களை நீக்க சிறந்த இயற்கை வைத்திய பொருளாக மஞ்சள் இருக்கிறது. தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும். எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது.

ஜலதோஷம் 

ஜலதோஷத்தால் மூக்கில் நீர்வடிதல், மார்பில் சளி கட்டிக்கொள்வதால் போன்றவைகளால் நாம் மிகவும் அவதிப்படுகிறோம். இப்படியான காலங்களில் இரவு நேரங்களில் சூடான பசும் பாலில் சிறிது மஞ்சள் மற்றும் சிறிது மிளகு தூள் கலந்து, தினந்தோறும் பருகிவர எப்படிப்பட்ட சளி, ஜலதோஷ பாதிப்புகளும் நீங்கும். ஜலதோஷத்தால் மூக்கில் நீர் வடிதல், தலைவலி போன்றவை குறையும்.

turmeric

கிருமிநாசினி 

மஞ்சள் சிறந்த இயற்கையான கிருமிநாசினி உணவாக இருக்கிறது. மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு மஞ்சள் கலந்த உணவுகளை அடிக்கடி கொடுத்து வந்தால் அவர்களின் செரிமானத் திறன் மேம்படுகிறது.

புண்கள் 

உடலில் ஏற்படும் காயங்கள் புண்களாக மாறி மிகுந்த வலியை வேதனையை தருகிறது. இந்த புண்கள் கிருமித் தொற்றுக்கள் ஏற்படாமல் காப்பது முக்கியமாக இருக்கிறது. உடலில் பட்ட காயங்கள் மற்றும் புண்கள் மீது அவ்வப்போது மஞ்சள் தூளை தூவி வருவதால் அவை இயற்கையான கிருமி கொல்லியாக செயல்பட்டு, உடலில் இருக்கின்ற கிருமிகளை அழித்து, மேற்கொண்டு புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் காத்து காயங்களை வேகமாக ஆற்றுகிறது.

turmeric

அம்மை நோய் 

கடுமையான கோடை காலங்களில் பலருக்கும் அம்மை நோய் ஏற்படுகிறது. அம்மை நோய் காற்று மற்றும் நெருக்கமான தொடர்புகளால் பிறருக்கும் பரவுகிறது. அம்மை நோயிலிருந்து விடுபட மஞ்சள் மற்றும் வேப்பிலையை ஒன்றாக சேர்த்து, அரைத்து உடலில் பூசி தினமும் குளித்து வந்தால் அம்மை நோய் நீங்கும். அம்மை பாதிக்கப்பட்டவர்களை சுற்றி மஞ்சள் கலந்த நீரை தெளித்து வந்தால் பிறருக்கும் அம்மை தாக்காமல் காக்கும்.

பாத வெடிப்புகள் 

உடலில் பித்தம் அதிகரிப்பதாலும், பாதங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகளாலும் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத வெடிப்புகளுக்கு இரசாயன மருந்துகளை பூசுவதைவிட தேங்காய் எண்ணெயுடன், மஞ்சள் தூளை நன்கு கலந்து, பாதத்தில் உள்ள வெடிப்புகளில் தடவி வந்தால் வெகு விரைவில் பாத வெடிப்புகள் குணமாகும்.

Turmeric

பெண்கள் 

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு வயிற்றில் அவ்வப்போது சிறிய அளவில் வலிகள் ஏற்படும். மேலும் கருப்பையில் நச்சுக்கள் தங்கி பலவித தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் மஞ்சள் பொடியை உணவில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று உபாதைகள் நீங்குவதோடு, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் நலத்தை மேம்படுத்தும்.

மது போதை 

மதுப் பழக்கம் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது என பலர் அறிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, எந்நேரமும் மது போதையில் இருக்கும் அவல நிலையை நாம் காண்கிறோம். அதிக மதுபோதையில் இருப்பவர்களை நெருப்பு மூட்டி புகை ஏற்படுத்தி, அதில் மஞ்சள் தூளை போட்டு, அந்த மஞ்சள் புகையை மது போதையில் இருப்பவர்கள் வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் மதுபோதை உடனடியாக தெளியும்.

turmeric

பூச்சிக்கடி 

வயல்களில், தோட்டங்களில் மனிதர்கள் நடமாடும் போது வண்டுகள், சிலந்திகள் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பூச்சிகள் கடித்து விடுகின்றன. இத்தகைய பூச்சிகள் கடிப்பதால் உடலில் ஒவ்வாமை, அரிப்பு உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றை நீக்க பச்சை மஞ்சளை நன்கு அரைத்து, அடிபட்ட இடங்களில் பூசுவதால் பூச்சிகள் கடித்து உடலில் பரவிய நஞ்சு முறியும்.

புற்று நோய் 

தற்காலங்களில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மனிதர்களையும் ஏதாவது ஒரு வகையான புற்றுநோய் தாக்குகிறது. புற்றுநோயை வேகமாக குணப்படுத்துவதிலும், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் மஞ்சளில் அதிகம் உள்ளதாக மேலை நாடுகளில் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைகிறது.