OMTEX AD 2

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

முன்பெல்லாம் இடுப்பு வலி என்பது வயதானவர்கள் சிலருக்கே வரக்கூடிய ஒரு வலியாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதினர் பலருக்கு இடுப்பு வலி என்பது சர்வ சாதாரணமாக வருகிறது. குறிப்பாக கணினி துறையில் வேலை செய்யும் பலருக்கும் இந்த வலி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் நமது உடலுக்கு நாம் சரியாக வேலை கொடுக்காமல் இருப்பதே. ஒருவர் அமர்நதபடி வேலை செய்கையில் அவர் சரியான முறையில் அமராவிட்டால் சில வருடங்களில் இடுப்பு வலி வரும் என்று நவீன ஆய்வு கூறுகிறது. இடுப்பு வலி நீங்க சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

back pain

குறிப்பு 1

இடுப்பு வலி குணமாக கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு கொள்ளை உண்பதால் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும்.

குறிப்பு 2 :

சுக்கு, மிளகு, கிராம்பு ஆகிய மூன்றும் இடுப்பு வலி குணமாக பெரிதும் உதவருகிறது. ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தேனீர் செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி நீங்கும்.

Ginger(sukku)

குறிப்பு 3 :

வெற்றிலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.

குறிப்பு 4 :

எள் எண்ணெயோடு பூண்டு மற்றும் தளுதாளி இலை சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

oil

குறிப்பு 5 :

பூண்டை இடித்து போட்டு நல்லெண்ணெயில் நன்கு காய்ச்சி வடிகட்டி இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இடுப்பு வலியில் இருந்து விடுபடலாம். அதோடு அதிக நேரம் அமர்ந்து பணி செய்வோர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். இதன் மூல இடுப்பு வலியை வரமால் தடுக்க முடியும்.

OMTEX CLASSES AD