தலை முடி வளர சித்த மருத்துவ குறிப்பு
முடி கொட்டுவது என்பது இன்றைய இளஞ்சர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலை அளிக்கும் விடயமாக உள்ளது. கண்ட கண்ட கெமிக்கல் எண்ணெய்களை தலையில் தேய்ப்பதாலும், தலைமுடியயை சரியாக பராமரிக்காமல் பொடுகை வர விடுவதாலும் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுகிறது. இது தவிர மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொட்டிய தலை முடி மீண்டும் வளர, முடி கொட்டாமல் இருக்க சித்த மருத்துவம் மூலம் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
வெந்தயம் மற்றும் குன்றிமணியை நன்றாக அறைந்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஒரு வார காலம் ஊறவைத்து பின் தினமும் அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
குறிப்பு 2 :
கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை ஆகிய நான்கையும் ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைக்கவும். பின் அதை சுத்தமான ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும்(காய்ச்சும்போது பச்சை நிறம் மாறக்கூடாது). காய்ச்சிய எண்ணெயை ஒரு நாள் வைத்து பின் அதை வடிகட்டி வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு குளித்தால் தலை முடி கொட்டுவது நிற்கும்.
குறிப்பு 3 :
வேப்பிலை கொழுந்து மற்றும் துளசியை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் சீயக்காய் போட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். இதன் மூலம் தலை முடி உதிர்வதை தவிர்க்கலாம்.
குறிப்பு 4 :
உருளை கிழங்கின் மேல் தோலை சீவிவிட்டு அதை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து சாறு எடுத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து பின் சீயக்காய் போட்டு குளித்தால் தலை முடி வளர்வது அதிகரிக்கும்.
குறிப்பு 5 :
கற்றாழையை எடுத்துக்கொண்டு அதன் மீது படிகாரத்தை தூவினால் அதன் சோற்று பகுதியில் இருந்து நீர் பிரிந்து வந்து விடும். அந்த நீரோடு சம அளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு இரண்டையும் கலந்து நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை தினசரி தலையில் தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும்.