மூலம் நோய் அறிகுறிகள்
ஒரு மனிதன் உயிர் வாழ உணவை உண்கிறான். அந்த உணவை உண்பதற்கான பசியை தூண்டியும், அந்த பசிக்கு உண்ணப்பட்ட உணவை நன்கு செரிமானம் செய்து, அந்த உணவின் சத்துக்களை உடலுக்கு கொடுத்து, செரிமானம் செய்யப்பட்ட கழிவான பொருட்களை வெளியேற்றுவது வயிறு மற்றும் வயிற்றுடன் தொடர்புகொண்டுள்ள குடல்களின் வேலையாகும்.
ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழிக்க வேண்டும் என சித்த வைத்திய நூல்கள் கூறுகின்றன. இந்த மலம் மனிதனின் குடலின் இறுதி பகுதியான ஆசன வாய் வழியே வெளியேறுகிறது. இந்த ஆசனவாய் அருகே ஏற்படும் ஒரு நோய் தான் மூலம். இந்த மூலம் உள்மூலம், வெளிமூலம், ரத்த மூலம், சீழ் மூலம், பவித்திர மூலம் என பலவகைப்படுகிறது. இந்த மூல நோய்க்கான அறிகுறியை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
மூலம் நோய் அறிகுறிகள்
மலச்சிக்கல்
மூல நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் மலச்சிக்கல் முதன்மையானது. மூலம் ஏற்பட்டது முதல் சிலருக்கு மலம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.
ஆசனவாய் பகுதி வீக்கம்
ஆசனவாய் சதை பகுதியின் ஓரத்தில் இருக்கும் ரத்தநாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, ஒரு புடைப்பு ஏற்பட்டிதிருப்பதை உணர்ந்தால் அது மூல நோய்க்கான ஒரு அறிகுறியாகும்.
மலம்கழிக்கும் போது வலி
உள்மூலம் அல்லது வெளிமூலம் எது ஏற்பட்டிருந்தாலும், அவர்களுக்கு மலம் கழிக்கும் போது கடுமையான வலி உண்டாகும்.
அரிப்பு மற்றும் நமச்சல்
மூலம் ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் தொடர்ந்து அரிப்பு நமச்சல் பொறுக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
ரத்தம் வெளியேறுதல்
மலம் கழிக்கும் போது சிலருக்கு அதனுடன் சேர்ந்து சிறு அளவில் ரத்தம் வெளியேறும். இது ரத்த மூலத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.
உட்காரும் போது அசவுகரியம்
மூலம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் சாதாரணமாக அமரும் போது ஆசனவாய் பகுதியில் வலியும் மற்றும் குடைச்சல் உணர்வும் ஏற்பட கூடும். இதனால் அவர்களால் நிம்மதியாக அமர முடியாது. இதுவும் மூல நோய்க்கான ஒரு அறிகுறியாகும்.