வைட்டமின் ஏ சத்து உட்கொள்வதால் தீரும் உடல்நலக் குறைபாடுகள் எவை தெரியுமா?
வைட்டமின் சத்துக்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை தான் வைட்டமின் ஏ சத்து. இந்த வைட்டமின் ஏ சத்து 1912 ஆம் ஆண்டு பிரெடரிக் காளாண்ட் ஹாப்கின்ஸ் எனப்படும் விஞ்ஞானி உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சதுக்களுக்கு அப்பாற்பட்டு வைட்டமின் சத்துக்கள் இருப்பதாகவும், அந்த சத்து மனிதர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதர்களின் உடலில் பல வகை நோய்களும், குறைபாடுகளும் தீர வைட்டமின் ஏ சத்து உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் ஏ பயன்கள்
நோய் எதிர்ப்பு திறன் வலுவடைய
மனிதர்கள் உடலில் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. வைட்டமின் ஏ சத்துக்களை அதிகம் உட்கொள்வதால் இந்த நிணநீர் சுரப்பிகளில் இருக்கும் லிம்போசைட் உடலின் ரத்தத்தில் பரவி இருக்கின்ற நோய்த்தொற்று ஆன்டிஜென் வேதிப்பொருட்களுக்கு எதிராக செயலாற்றும் திறனை அதிகரிக்கிறது. மேலும் உடலில் இருக்கின்ற செல்கள் மற்றும் திசுக்களில் ஈரப்பதத்தை காத்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை மேலும் வலுவடையச் செய்கிறது. வைட்டமின் ஏ சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் சத்து உங்கள் உடலுக்குள் எத்தகைய நோய் தொற்று கிருமிகளும் பரவாமல் காக்கிறது. அதையும் மீறி உங்கள் உடலுக்குள் செல்கின்ற ஆபத்தான நுண்கிருமிகளையும் எதிர்த்து செயல்பட்டு, அவற்றை அழித்து உங்களை நோய்களிலிருந்து காக்கிறது.
கண்பார்வை மேம்பட
மனிதர்களின் கண் பார்வைத் திறனை மேம்படுத்துவதில் வைட்டமின் ஏ சத்து முக்கிய பங்காற்றுகிறது. இந்த சத்து நமது உடலில் சரியான அளவில் இருக்கின்ற போது கண்களின் திசுக்களில் ஈரப்பதம் வறண்டு விடாமல் காக்ககிறது. மேலும் இருட்டில ஓரளவுக்கு தெளிவாகப் பார்க்கக் கூடிய ஆற்றலையும் கண்களுக்குத் தருகிறது. வைட்டமின் ஏ சத்தை ரெட்டினால் என அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இது கண்களின் ரெட்டினா பகுதியின் நலனை பாதுகாத்து, கண் பார்வைத் திறனை தெளிவாக்கும். கண் திசுக்களின் குறைபாடு மற்றும் கண் புரை போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
தோல் நோய்கள் குணமாக
வைட்டமின் ஏ சத்து உடலில் செல்களில் ஏற்படும் கூடிய ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, அந்த செல்களில் இருக்கின்ற நச்சுத்தன்மையை நீக்குகிறது. இவை இரண்டும் உடலிலிருந்து வெளியேறுவதால் நமது வெளிப்புற சருமத்தின் ஈரப்பதம் மற்றும் தளர்வு தன்மை காக்கப்பட்டு, தோலுக்கு புத்துணர்வான ஒரு தோற்றத்தைத் தருகிறது. ஒரு சிலருக்கு ஏற்படும் சோரியாசிஸ் எனப்படும் தோல் வெள்ளை படுதல் போன்ற குறைபாடுகளையும் வைட்டமின் ஏ சத்து தடுக்கிறது.
பற்கள் உறுதியடைய
உணவு நன்கு ருசித்து மென்று தின்பதற்கு பற்கள் உதவுகின்றன. இந்த பற்களின் ஆரோக்கியம் உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்க்கு தரப்படும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியம். வைட்டமின் ஏ சத்து அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு, பற்களின் உட்புறத்தில் டென்டின் எனப்படும் கால்சியம் சத்து வகையின் சேர்மானம் அதிகரித்து, பற்களின் உறுதித் தன்மையை மேம்படுத்துகிறது. பற்கள் எளிதில் வலுவிழுந்து உடைவது, பற்சொத்தை போன்ற குறைபாடுகள் ஏற்படுவதும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உட்கொள்வதால் வெகுவாக குறைகிறது.
சிறுநீரக கற்கள்
பலருக்கும் தங்களின் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது மிகுந்த வேதனை தரக்கூடிய ஒரு விடயமாக இருக்கிறது. இந்த பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க சரியான அளவில் நீர் அருந்துவதோடு வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. வைட்டமின் ஏ சத்து சிறுநீரகங்களில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் சேர்ந்து, கற்களாக மாறுவதைத் தடுக்கிறது. மேலும் சிறுநீர்க் குழாய்களின் செயல்பாடுகளை முறையான வழியில் வைத்து, எதிர்காலங்களில் மீண்டும் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கிறது.
தசைகள் வலிமை பெற
மஸ்குளர் டிஸ்ட்ராபி (Muscular dystrophy) என்பது உடலின் தசைகள் மிகவும் வலுவிழந்து சரியாக செயல்பட முடியாமல் போகச் செய்யும் ஒரு நோயாக இருக்கிறது. இந்நோய் வளரும் குழந்தைகளிடம் வைட்டமின் ஏ சத்து மற்றும் இதர சத்துக்கள் குறைபாடுகள் காரணமாக அதிகம் ஏற்படுகிறது. மனிதர்கள் அனைவருக்குமே தசைகள் வலுவாக இருக்க செய்யும் சக்திகளில் ஒன்றாக வைட்டமின் ஏ இருக்கிறது .வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து கொண்ட உணவுகளை கொடுத்து வருவதால் மஸ்குளர் டிஸ்ட்ராபி நோய் ஏற்படுவதைத் தவிர்த்து, குழந்தைகள் சிறந்த தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமையையும் பெற உதவுகிறது.
புற்றுநோய் தடுக்க
வைட்டமின் ஏ சத்து ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூலப் பொருளாக இருக்கிறது. இது பொதுவாக எந்த ஒரு வகை புற்றுநோய் ஏற்படுவதையும் தடுப்பதாக இஸ்ரேல் நாட்டின் பென் குரியோன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கின்ற. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்த நபர்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி புற்று மார்பகப் புற்று மற்றும் கருப்பை புற்று வகையான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் வெகுவாக குறைந்திருப்பதாகவும் மருத்துவ ஆய்வுகளின் முடிவு தெரிவிக்கிறது.
இளமை தோற்றம் அதிகரிக்க
மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வைட்டமின் ஏ சத்து மனிதர்களின் முதுமை அடையும் தன்மையை காலம் தாழ்த்தி, இளமை தோற்றத்தை நீடிக்கச் செய்வதாக தெரிய வந்திருக்கிறது. நமது உடலில் அழிந்து போன செல்கள் திசுக்கள் போன்றவற்றை நீக்கி, புதிய செல்கள் திசுக்களின் உற்பத்தியை வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க செய்வதால் இது சாத்தியமாகிறது எனவும் தெரிய வந்திருக்கிறது. மேலும் வைட்டமின் ஏ சத்து மனிதர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை வெகுவாக காலம் தாழ்த்தும் ஆற்றல் பெற்றது என அந்த ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மீசில்ஸ் நோய்
மீசில்ஸ் என்பது ஐந்து முதல் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய்க்கு சரியான தடுப்பூசி போடுவதோடு வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வைட்டமின் ஏ சத்து மீசில்ஸ் நோயால் குழந்தைகளுக்கு ஏற்படும் அதிக ஜுரம் மற்றும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தி குழந்தைகளுக்கு உடல் வலிமையை உண்டாக்குகிறது. அதே நேரத்தில் மீசில்ஸ் நோய் ஏற்படுத்தும் கொடிய வைரஸ் கிருமித் தொற்றை குழந்தைகளின் உடலில் இருந்து முற்றாக ஒழிக்கவும் உதவுகிறது.
மலட்டுத்தன்மை நீங்க
மனிதர்களாக பிறந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை பெறும் பாக்கியம் உண்டாகும். வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த உணவுகளை ஆண்களும், பெண்களும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது. கருமுட்டை மற்றும் உயிர் அணுக்களின் பெருக்கத்தையும் அவற்றின் கருவுறும் ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது. மலட்டுத் தன்மையையும் நீக்குகிறது.