Advertisement

சுகப்பிரசவம் ஏற்பட வழிமுறைகள்

சுகப்பிரசவம் ஏற்பட வழிமுறைகள்

குழந்தை பேறு என்பது பெண்களுக்கு இயற்கையின் ஒரு மிக சிறந்த பரிசாகும். பிரசவ காலத்தில் தனது உயிரையே பணயம் வைத்து ஒரு குழந்தையை இப்பூவுலகிற்கு கொண்டு வருகின்ற ஒரு தாயின் மனஉறுதி மற்றும் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்தால் தான் ஒரு வீடும், நாடும் சிறக்கும். அந்த வகையில் நோய் நொடியில்லாத, உடல்நலமிக்க குழந்தையை பெற்றெடுக்க விரும்பும் பெண்கள், தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை குறிப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

சுகப்பிரசவம் ஆக வழிகள்

மருத்துவ பரிசோதனை

திருமணமான தம்பதிகள் தங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க ஒரு அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் தங்கள் இருவரின் உடலை நன்கு பரிசோதித்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும், தங்களின் பெற்றோர்கள் மற்றும் தங்களின் பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை வியாதி, இதயம் சம்பந்தமான வியாதிகள், மனநலம் சார்ந்த குறைபாடுகள் இருந்திருக்கும் பட்சத்தில் அதை மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெற வேண்டும். மேலும் குழந்தை பெற்றெடுக்க போகும் பெண் தனக்கு தைரொய்ட், சிறுநீர் தொற்று வியாதிகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற ஏதேனும் வியாதிகள் இருந்தாலும் அது மருத்துவரிடம் கூறி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று, முழு உடல் நலம் தேறிய பின்பு குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்தது.

உணவு

கருவுற்றிருக்கும் பெண்கள் பேறு காலம் முடிகின்ற வரையில், தன்னுடைய மற்றும் தனது கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுத்தமான, சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். பேறு காலங்களில் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. நார்ச்சத்து அதிகமுள்ளதும் கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமுள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மீன் உணவுகளை உண்ணலாம். கொண்டை கடலை, ராஜ்மா, இரும்பு சாது அதிகமுள்ள கீரைகள் போன்றவற்றை அடிக்கடி உண்ண வேண்டும். கருவுற்ற முதல் மூன்று மாத காலம் வரை தலைசுற்றல், வாந்தி போன்றவை அதிகம் ஏற்படும் காலம் என்பதால் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறுகளை அதிகம் பருக வேண்டும். அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களையும், முளைவிட்ட தானியங்களையும் சாப்பிடுவது உடலுக்கு வலு சேர்க்கும். காபி, டீ மற்றும் போதை பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

Pregnancy symptoms

தூக்கம்

கருவுற்றிருக்கும் பெண்கள் நல்ல தூக்கத்தை பெறுவது அவசியமாகும். பொதுவாக கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் வரை கர்ப்பிணி பெண்களுக்கு ஆழ்ந்த தூக்கம் அதிகம் ஏற்படாது. இரவில் தூக்கம் விட்டு விட்டு தான் வரும். எனவே இரவின் சரியாக தூங்க முடியாத பெண்கள் பகலில் அவ்வப்போது குட்டி தூக்கம் போடலாம். இரவில் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் படுத்துக்கொள்வதால் சிறுநீர் கழிப்பதற்கு ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்திருக்கும் நிலை ஏற்படாது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உரங்கள் செல்வதால் நல்ல தூக்கம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உடற்பயிற்சி

நூறு ஆண்டுகளுக்கு விவசாய தொழிலில் அதிகம் ஈடுபட்டிருந்த முன்பு நம் நாட்டின் பெண்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் வயலில் வேலை செய்ததாகவும், அப்போது குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டால் சில பெண்களின் உதவியுடன் மறைவாக ஓரிடத்தில் சென்று குழந்தை பெற்று அதற்கு பாலூட்டி தூங்க வைத்தபின்பு மீண்டும் வயலில் வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அக்கால பெண்களை போல உடல் மற்றும் மன வலிமை இப்போதைய பெண்களிடம் இல்லை என்றாலும் வீட்டில் முழுமையான ஓய்வில் இல்லாமல் உடலின் மீது மிகுந்த அழுத்தம் தராத வேலைகளையும், அவ்வப்போது நடப்பதையும் வாடிக்கையாக்கிக்கொள்ளவேண்டும். இதனால் பெண்களின் இடுப்பெலும்புகள், இடுப்புத்தசைகள் நெளிவுத்தன்மை மற்றும் விரிவடையும் தன்மை பெற்று பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.

Pregnancy symptoms

உடல் எடை

கர்ப்பம் தரிக்கும் போது பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பானது தான். கர்ப்பிணி பெண்கள் 10 முதல் 12 கிலோ வரை அவர்களின் உடல் எடை அதிகரிப்பது சரியான அளவாகவும். ஆனால் சில பெண்களுக்கு 15 கிலோவிற்கு மேல் எடை கூடி விடுகிறது. பேறு காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட உடலளவை விட அதிக உடல் எடை கூடுவது கர்ப்பிணிகளின் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, பிள்ளை பெறும் போது வலிப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்த கூடும். பிரசவ காலத்தில் மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தும். மேலும் இந்த பேறு கால எடை அதிகரிப்பு பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மருத்துவர்

பேறுகாலத்தில் இருக்கும் பெண்களை உங்களுக்கு நம்பிக்கையான, அனுபவம் மிகுந்த ஒரு மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்வது நல்லது. முடிந்த வரை குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை அந்த மருத்துவரிடேமே அழைத்து செல்ல வேண்டும். அடிக்கடி மருத்துவர்களை மாற்ற கூடாது. கருவுற்ற 28 வார காலங்களில் ஒரு முறையும், 36 வாரம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை வரம் ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது நல்லது.

Pregnancy symptoms

தடுப்பூசிகள்

குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்களையும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளையும் பாதிக்ககூடியதாக சில வியாதிகள் இருக்கின்றன. அதற்கான தடுப்பூசிகளை மருத்துவர்களின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் பெண்கள் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் உடலை நலத்தை பாதுகாக்கும் போலிக் அமில மாத்திரைகள், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவற்றை முறை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்ய கூடாதவைகள்

கருவுற்றிக்கும் காலத்தில் பெண்கள் தங்களின் உடல் மற்றும் தங்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மீது மிகுந்த அழுத்தத்தை தரும் வகையான கடினமான காரியங்களை செய்ய கூடாது. தரை அதிரும் வகையில் நடத்தல், பரண்களின் மீது இருக்கும் பொருட்களை நாற்காலியின் முனையில் நின்ற வாறு எட்டி எடுக்க முயற்சித்தால், வேகமாக ஓட முயற்சித்தால், அதிகளவு எடையுள்ள பொருட்களை குனிந்து, நிமிர்ந்து தூக்க முயற்சித்தால் போன்ற காரியங்களை அறவே செய்யக்கூடாது. கூர்மையான பொருட்கள் உங்கள் அருகாமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

Pregnancy symptoms

மன நலம்

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் நலமட்டுமல்ல மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை பாதிக்கும் வகையான திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பத்திரிகைகள் போன்றவற்றை தவிர்ப்பது. நல்லது நகைச்சுவையான காட்சிகள், கதைகள். நீதி நெறி கதைகள் போன்றவற்றை படிப்பதும் பார்ப்பதும் நல்லது. மனதிற்கு இதமளிக்கும் இசையை அடிக்கடி கேட்டு ரசிப்பது கருவிலிருக்கும் குழந்தைக்கும் நன்மையை தரும் என பெரும்பாலான மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேவாரம், திருவாசகம் மற்றும் இன்ன பிற ஆன்மீக தொடர்புடைய புத்தகங்களை படிப்பது நல்லது.

குடும்பத்தினர்

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு தங்களின் பேறு காலத்தில் மிகுந்த ஆதரவாக தங்களின் குடும்பத்தினர் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாகும். கருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன் மட்டுமல்லாது, அப்பெண்ணுக்கு பெற்றோர்கள், இன்ன பிற உறவினர்கள் அப்பெண் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் வரை அவளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.