தினமும் ஈச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
உலகெங்கிலும் பல வகையான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையில் இருக்கும் இடங்களின் சூழலுக்கு ஏற்ற வகையில், மனிதர்கள் உண்ணத்தக்க பல வகையான பழங்கள் விளைகின்றன. பாலைவனப் பகுதிகளில் அதிகம் விளையும் ஒரு மரமாக பேரிச்சம் பழ மரம் இருக்கிறது. அந்த பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக ஈச்ச மரம் இருக்கிறது. அதில் விளையும் பழம் ஈச்சம் பழம் எனப்படுகிறது. இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டிருக்கும் ஈச்சமரத்தில் விளைகின்ற ஈச்சம் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஈச்சம் பழம் நன்மைகள்
மலச்சிக்கல்
உடலுக்கு உழைப்பின்றி இருப்பது, நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்பது, அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
எலும்புகள்
ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கண்கள்
ஒவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.
இரும்புச்சத்து
ஈச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் ஈச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
ஆண்மை சக்தி
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று , ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
உடல் எடை
ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் வயது மற்றும் உயரதிக்கேற்ற எடை இருப்பது அவசியமாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.
போதை பழக்கம்
இன்று பலரும் புகையிலை, சிகரட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர். போதை பழக்கத்தில் விடுபட நினைப்பவர்கள், போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
வயிற்று பிரச்சனைகள்
கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு வயிற்றில் கிருமிகள் தொற்றால் வயிற்று போக்கு ஏற்படுகின்றன. இந்த வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் மூன்று வேலை சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
புற்று நோய்
செயற்கையான ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஈச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளன. ஈச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக பல மருத்துவ ஆய்களை மேற்கொண்ட ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள் இனிப்பு தன்மை கொண்ட உணவுகளை குறைத்து சாப்பிட மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் உடலுக்கு நன்மை தரும் வகையான இயற்கையான இனிப்பு சக்திகளைக் கொண்ட உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். அப்படியான ஒரு இனிப்புச் சத்து கொண்ட இயற்கை உணவாக ஈச்சம்பழம் இருக்கிறது. ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது.