வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்திய முறை
வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது வயிற்றில் ஏற்படும் சில கோளாறுகளே. நுரை ஈரல், உணவு குழாய், மூச்சி குழாய் போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையால் வாய் துர்நாற்றம் ஏற்படும். பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்னையாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். வாய் வறண்டு போவதும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இப்படி வாய் துர்நாற்றத்திற்கு சில காரணங்கள் உண்டு. இதில் இருந்து விடுபட சில எளிய மருத்துவ குறிப்புகளை இங்கு பார்ப்போம்.
குறிப்பு 1
பலா இலையை சிறியதாக நறுக்கி அதை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பின் அதோடு பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் பருகிவர வாய் புண் ஆறும். இதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
குறிப்பு 2
தண்ணீரில் எழுமிச்சை சாறு புழிந்து அதோடு சிறிது உப்பு கலந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்
குறிப்பு 3
லவங்க பட்டையை சிறிதளவு நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
குறிப்பு 4
தினமும் உணவு உண்ட பிறகு ஆப்பிள், கேரட் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு எச்சில் சுரப்பதையும் அதிகரிக்க செய்யும்.
குறிப்பு 5
சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது, காலை மாலை என இரு வேலையும் பல் துலக்குவது, பல் துலக்கும் சமயத்தில் நாக்கை சுத்தம் செய்வது போண்டவற்றை தினமும் கடை பிடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.