Advertisement

முடி அடர்த்தியாக, நீளமாக வளர வேண்டும். அதேசமயம், எந்தவித பக்க விளைவும் வரக்கூடாது. அப்போ, நீங்களே உங்க கையால இந்த ஷாம்புவை தயார் பண்ணிக்கோங்க!

முடி அடர்த்தியாக, நீளமாக வளர வேண்டும். அதேசமயம், எந்தவித பக்க விளைவும் வரக்கூடாது. அப்போ, நீங்களே உங்க கையால இந்த ஷாம்புவை தயார் பண்ணிக்கோங்க!

நம்முடைய முடி வளர்ச்சிக்காக எந்தவிதமான குறிப்புகளை பின்பற்றினாலும், அதன் மூலம் நமக்கு எதிர்காலத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முடைய முடி அடர்த்தியாக வளரவும், பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும், எத்தனையோ பாட்டிலில் அடைக்கப்பட்ட கெமிக்கல் கலந்த ஷாம்புவை தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இனி அதையெல்லாம் பயன்படுத்த வேண்டாம். உங்கள் வீட்டிலேயே உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை வைத்து நீங்களே ஷாம்பு தயாரித்துக் கொள்ளுங்கள். அந்த ஷாம்பூ எப்படி தயாரிப்பது என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

vendayam

உங்கள் சமையலறையில் இருக்கும் அந்த மூன்று பொருள். வெந்தயம், பாசிப்பயறு, கடலை பருப்பு. இந்த மூன்று பொருட்களையும் ஒரே சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பொருட்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் மைய அரையாது. ரைஸ்மில்லில் கொடுத்து, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு என்று சொல்லி, மைய அரைத்து கொண்டு வாருங்கள்.

அதன் பின்பு, அந்த மாவை சல்லடையில் போட்டு நைசாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஈரம் படாமல், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டால். இரண்டு மாதங்கள் வரை பூச்சு பிடிக்காமல் இருக்கும். இந்த மாவை எப்படி பயன்படுத்துவது?

pasi-paruppu

நீங்கள் தலைக்கு குளிக்க செல்வதற்கு முன்பாகவே, இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, உங்கள் தலைமுடிக்கு தேவையான பொடியை, ஸ்பூனில் எடுத்து, தனியாக ஒரு கிண்ணியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சீயக்காய் குழைப்பது போல, குழைத்து, அப்படியே வைத்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் ஷாம்பு பதத்திற்கு இது, கொழகொழப்பாக மாறிவிடும்.

அதன் பின்பாக உங்களது தலைமுடியை, நீங்கள் தயாரித்த இந்த ஷாம்புவை வைத்து தேய்த்துக் குளித்து பாருங்கள். ஷாம்பூவில் நுரை வருவது போல, நன்றாக நுரை வரும். தலையிலிருக்கும் அழுக்கு சுத்தமாக போய்விடும். உங்களது தலைமுடி பூ போல் மாறி விடும். ஒரு முறை, இந்த முறையை பின்பற்றி பார்த்தாலே நல்ல வித்தியாசத்தை உணர முடியும்.

kadalai-paruppu

எந்தவித கலப்படமும் இல்லாமல், நம் கண்முன்னேயே நாமே தயாரிக்கும் இந்த ஷாம்பு தான் உண்மையில் கலப்படம் இல்லாத ஷாம்பு. கடையில் ஹெர்பல் என்று டப்பாவிலோ பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் செயற்கையான பொருள், கலக்காமல் கட்டாயம் இருக்காது. உங்கள் கையால், சிரமம் பார்க்காமல் இந்த பொடியை அரைத்து வைத்து, உங்கள் தலைக்கு தேய்த்து குளித்து வாருங்கள். தலை முடி பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.