Advertisement

இடுப்பு வலி குணமாக பாட்டி வைத்தியம்

இடுப்பு வலி குணமாக பாட்டி வைத்தியம்

இன்றைய சூழலில் இடுப்பு வலி என்பது அனைத்து வயதினருக்கு வருகிறது. இருவது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோமானால் வயதானவர்களுக்கு மட்டுமே இடுப்பு வலி இருந்தது. ஆனால் இன்றோ நமது வாழ்க்கை நிலை மாறியதால் 20 வயது இளஞ்சர்களுக்கு கூடு இடுப்பு வலி வருகிறது. இடுப்பு வலி வர பல காரணங்கள் உண்டு. ஒரே இடத்தில அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் இடுப்பு வலி வரலாம். வாகனத்தில் தினமும் வெகு தூரம் செல்வதால் இடுப்பு வலி வரலாம். முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டால் இடுப்பு வலி வரலாம். இப்படி இடுப்பு வலி வர இன்னும் ஏராளமான காரணங்கள் உண்டு. இடுப்பு வலி குணமாக சித்த மருத்துவம் கூறி சில எளிய குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

Back Pain (iduppu vali)

குறிப்பு 1 :

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை எண்ணெயை வாங்கி ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யவேண்டும். கட்டியாக இருக்கும் இலுப்பை எண்ணெயை சூடு செய்ததும் அது கரைய ஆரமிக்கும். எண்ணெய் நன்கு கரைந்ததும் அதை ஆறவைக்க வேண்டும். பிறகு இடுப்பு பகுதியில் எங்கு வலி உள்ளதோ அந்த இடத்தில் இந்த எண்ணெயயை தடவி விட்டு சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை செய்தால் இடுப்பு வலிக்கான உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு 2 :

சுக்கு, மிளகு, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும். இதை காலையில் இரண்டு குண்டுமணி அளவில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

Milagu

குறிப்பு 3 :

ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து அதோடு 100 மி லி அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். மேலும் அதோடு கற்பூரத்தையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வெது வெதுப்பான சூட்டில் இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவினால் இடுப்பு வலி குறையும்.

குறிப்பு 4 :

கஸ்தூரி மஞ்சள் மற்றும் வெள்ளைப் பூண்டோடு நொச்சி இலையை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு அதை வேப்ப எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவினால் இடுப்பு வலி குறையும்.

Garlic poondu

குறிப்பு 5 :

இடுப்பு வலி நீங்க முடக்கற்றான் இலை பெரிதும் உதவுகிறது. முடக்கற்றான் இலையோடு வெங்காயம் மற்றும் பருப்பு சேர்த்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.