முருங்கைக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
எந்த ஒரு நோயும் நம்மை தாக்காமல் தடுப்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம் நாட்டில் இயற்கையாக விளைகின்ற பல வகையான காய்கறிகள் எத்தகைய நோய்களும் நமது உடலை தாக்காமல் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் நம் நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு காய் வகை முருங்கைக்காய் ஆகும். இந்த முருங்கைக்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முருங்கைக்காய் நன்மைகள்
ஆண்மை குறைவு
இன்றைய காலத்தில் இளம் வயது மற்றும் நடுத்தர வயதை நெருங்கும் ஆண்கள் பலருக்கு ஆண்மை குறைவு மற்றும் இதர பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.
எலும்புகள்
மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
நீரிழிவு
நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு நோயாக இருக்கிறது. முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் இந்த வகையான நீரிழிவு நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.
ரத்த சுத்தி
முருங்கைக்காயில் நமது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அழிக்கும் வேதி பொருட்கள் அதிகம் உள்ளது. தினமும் அல்லது வாரம் மூன்று அல்லது நான்கு முறை முருங்கைக்காயை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்க பெற்று ரத்தம் சுத்தமாகி, உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.
வயிறு பிரச்சனைகள்
நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க னால் நம்மால் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். செரிமானத்தை அதிகரிக்கும் திறன் முருங்கைக்காய்க்கு அதிகம் உள்ளது. பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு
முருங்கைக்காயில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி முருங்கைக்காய்க்கு உண்டு. வாரம் மூன்று அல்லது நான்கு முறை முருங்கைக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
கண்கள்
முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். அனைவருக்கும் கண்பார்வை நன்றாக இருப்பது அவசியமாகும். முருங்கைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது. மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது.
ரத்த அழுத்தம்
மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் உடல்நலத்தை வெகு விரைவில் பாதிக்ககூடிய ஒரு நோயாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்றைய காலங்களில் பாதிக்கிறது. இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் முருங்கைக்காயை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.