Advertisement

தனியா சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தனியா சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. இந்த கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன, இந்த தனியாவும் கொத்தமல்லியை போன்று பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தனியாவை பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

dhaniya

தனியா பயன்கள்

ஆஸ்டியோபோராசிஸ் 

உடலில் அத்தியாவசிய சத்துக்கல்ளின் குறைபாடுகள் ஏற்படுவதால், வயதாகும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுகள் வலுவிழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. தினமும் 150 மில்லி தண்ணீரில் 3 கிராம் தனியாவை போட்டு கொதிக்க வைத்து, பருகி வந்தால் ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு மூட்டுகள் பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

வயிற்றுப்போக்கு குணமாக

சாப்பிட்ட உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கு தனியா மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதில் இருக்கும் போர்னியால் மற்றும் லினாலூல் சத்துக்கள் செரிமான திறனை அதிகப்படுத்துகின்றன. தனியாவில் லிமோனின், சினியோல், பீட்டா பிலாண்டரின் மற்றும் ஆல்ஃபா பினின் வேதிப்பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் இருக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களால் சீதபேதி போன்ற கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. செரிமான உறுப்புகளில் இருக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களையும் தனியாவில் இருக்கும் இந்த வேதிப்பொருட்கள் அழிக்கிறது.

dhaniya

கண் நோய்கள் குணமாக 

பொதுவாக மழைக்காலங்களில் பலருக்கும் மெட்ராஸ் ஹை எனப்படும் கண் நோய் ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் கஞ்சைக்டிவிட்டிஸ் என அழைப்பார்கள். தனியாவில் இந்த கஞ்சைக்டிவிட்டிஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. தனியாத் தூள் கலந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இதமான சூட்டில் ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு கண்களில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளை சுத்தப்படுத்த பயன்படுத்தி வந்தால் கண் தொற்று நோய்கள் மற்றும் கண் வீக்கம் போன்றவை எளிதில் குணமடைகிறது.

மூட்டுவாத, பக்கவாத நோய்கள் 

ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, ருமாட்டிசம் எனப்படும் பக்கவாத நோய் இக்காலங்களில் பலருக்கும் ஏற்படுகிறது. இப்போதைய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி தனியாவிற்கு அதிகமுள்ளது. தனியாவில் சினியோல் மற்றும் லினோலிக் அமிலங்கள் அதிகம் சுரக்கின்றது. தினமும் சிறிதளவு தனியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை பருகி வந்தால் மூட்டு வாதம், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

dhaniya

ரத்த அழுத்தம் கட்டுக்குள் வர 

நாற்பது வயதைத் தொட்டு விட்ட அனைவருக்குமே ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கின்ற தன்மை தனியாவிற்கு அதிகமுள்ளது. நமது ரத்தத்தில் கால்சியம் அயனிகள் மற்றும் அசிட்டைல்கோலைன் வேதிப்பொருல்களை கலக்கச் செய்து உடலில் இருக்கும் மத்திய நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை ஆசுவாசப்படுத்தி, உடலில் ரத்த நாளங்களில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயத் தசைகளில் உண்டாகும் அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படாமலும் காக்கிறது.

வாய் புண்கள், கிருமி தொல்லை நீங்க 

சிட்ரோனெல்லால் எனப்படும் வேதிப்பொருள் தனியாவில் அதிகமுள்ளது. இந்த வேதிப்பொருள் அடிப்படையில் கிருமிநாசினி தன்மை கொண்டது. இது தான் மனிதர்களின் வாயில் ஏற்படுகின்ற புண்கள் மற்றும் கிருமிகளின் தொற்றுகளை எதிர்த்து செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. பற்பசையை கண்டு பிடிப்பதற்கு முன்பாக மக்கள் தனியா விதைகளை வாயில் போட்டு நன்கு மென்று, பற்கள் மற்றும் ஈறுகளில் படிந்திருக்கும் கிருமிகளை நீக்கி வாய் சுகாதாரத்தை காத்தனர்.

dhaniya

ஒவ்வாமை நீங்க 

தனியாவை தொடர்ந்து அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் வெகுவாக குறைந்திருப்பதை பல மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். தனியாக ஆன்ட்டி This domain Sweet பொருட்கள் அதிகம் இருப்பதால் பருக்கள் பருவகால மாற்றம் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் ரைனிடிஸ் எனப்படும் ஒரு வகை எதிர்த்து செயல்படுகிறது குறிப்பிட்ட வகை செடிகள் பூச்சிகள் மற்றும் உணவுகளின் வாசம் மற்றும் தொடர்பால் சிலருக்கு உண்டாகும் ஒவ்வாமையையும் தனியா சாப்பிட்டு வருவதால் வெகுவாக குறைகிறது

சால்மோனெல்லா பாக்டீரியா 

சால்மோனெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியாவாகும். இது கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் மனிதர்களின் உடலில் நோய் உண்டாக்கி, தீவிர வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகிறது. இந்த சால்மோனெல்லா பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அன்டி – பையோட்டிக் தன்மைகள் நிறைந்த தனியா சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அதிலிருக்கும் தோடேசினால் எனும் வேதிப்பொருள் இந்த சால்மோனெல்லா பாக்டீரியாவை விரைவில் அழித்து உடல்நலத்தை காப்பதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பெர்க்லி பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுக் குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.

dhaniya

சின்னம்மை நோய் நீங்க 

தனியாவில் அத்தியாவசிய எண்ணெய்கள், பாக்டீரியா வைரஸ் எதிர்ப்பு வேதிப்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள், நச்சுத்தன்மையை நீக்குகின்ற அமிலங்கள், மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தனியாவில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. இந்த அதிக அளவு வைட்டமின் சி சத்து சின்னம்மை நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு தனியா கலந்து செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவில் அந்நோய் நீங்வதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.

கொலஸ்ட்ரால் அளவு 

மனிதர்களின் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்கள் அத்தியாவசியமாக இருக்கிறது. தனியா சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் வேதிப் பொருட்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்களின் சேர்மானத்தை தடுக்காமல், கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை உடலில் சேராமல் தடுக்கிறது. தனியாவில் அஸ்கார்பிக் அமிலம், பால்மாட்டிக் அமிலம், லினோலிக் அமிலம், போலிக் அமிலம், ஸ்டியாரிக் அமிலம் ஆகியவை இருக்கின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் சக்திகளுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகின்றன. இதனால் இருதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட தனியா விதைகளை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.