நாட்டு கோழி முட்டை பயன்கள்
எல்லா மனிதர்களுக்கும் சைவ உணவு எனப்படும் தாவரங்களில் இருந்து கிடைக்க கூடிய உணவுகளால் மட்டுமே சத்துக்களால் மட்டுமே உடலின் சத்து தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. அசைவ உணவு எனப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன் போன்றவற்றையும் பலர் சாப்பிடுகின்றனர். இத்தகைய இறைச்சி உணவுகள் சாப்பிட முடியாதவர்கள், சாப்பிட பிடிக்காதவர்களும் உண்ணக்கூடிய ஒரு உணவு பொருளாக கோழி முட்டை இருக்கிறது. அதிலும் பிராய்லர் கோழி முட்டை, நாட்டு கோழி முட்டை என இருவகை இருக்கிறது. இதில் “நாட்டு கோழி முட்டை” சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
நாட்டு கோழி முட்டை பயன்கள்
உடல் வலிமை
உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள நினைப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகிய அனைவருக்குமே உடலில் மிகுந்த பலம் தேவைப்படுகிறது. தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாட்டு கோழி முட்டையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் மிகுந்த பலம் பெரும். நீண்ட நேரம் உழைக்கும் சக்தியையும் கொடுக்கும்.
கண்கள்
கண்களில் கண்பார்வை குறைபாடு, கண்புரை, கண் அழுத்தம் போன்ற நோய்கள் உடலில் புரத சத்தின் குறைபாடு, ஏற்ற தாழ்வுகளாலேயே ஏற்படுகிறது. நாட்டு கோழி முட்டையில் புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரத சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது.
எலும்புகள்
உடலின் அஸ்திவாரமாக இருப்பதே எலும்புகள் தான். அந்த எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். எலும்புகள் உடைந்து வைத்தியம் மேற்கொண்டு வருபவர்கள் நாட்டு முட்டையை சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் சீக்கிரத்திலேயே கூடும்.
நோய் கால உணவு
பல வகையான நோய்கள், விபத்துகள் போன்றவற்றில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது. சூடான பசும்பாலில் நாட்டு கோழி முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கி அக்காலத்தில் நீண்ட நாட்களாக நோய் பாதிப்பில் இருந்தவர்கள் உடல் நலம் தேறவும், உடலில் பலம் ஏற்படவும் நோயாளிகளுக்கு மருத்துவ உணவாக தரப்பட்டது.
கொலஸ்ட்ரால்
உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நாட்டு முட்டையை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.
ஆண்மை குறைபாடுகள்
நரம்பு தளர்ச்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு உடலின் பெரும்பாலான நரம்புகள் தளர்ந்து விடுவதால் அவர்களால் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது . நாட்டு கோழி முட்டை ஆண்களின் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை போக்கும். மலட்டு தன்மையையும் நீக்கி ஆரோக்கியமான குழந்தை பெற உதவும்.
தலை முடி, நகம்
உடலில் தலைமுடி மற்றும் நகங்கள் உணவில் இருந்து பெறப்படும் புரதத்தில் மெலனின் எனும் புரத பொருளை அதிகம் பயன்படுத்தியே வளருகிறது. நாட்டு கோழி முட்டையில் மெலனின் புரத சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி உதிர்வு, நகங்கள் உடைவது போன்ற புரத சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனை நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நாட்டு கோழி முட்டை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டங்களை அளிக்கிறது.
புற்று நோய்
இயற்கையான உணவுகள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள பயிர்களை சாப்பிடும் நாட்டு கோழி இடும் முட்டைகளில் பல விதமான நோய்களை எதிர்த்து செயல் புரியும் திறன் அதிகம் உள்ளது. நாட்டு கோழி முட்டை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எந்த வகையான புற்று நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் எடை
உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற அதீத பசி உணர்வு தான். நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். இந்த முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.