Advertisement

மருத்துவ குணங்கள் ஏராளம் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணியின் பயன்கள்

மருத்துவ குணங்கள் ஏராளம் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணியின் பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணி மூலிகை பற்றி நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிந்திருந்ததை, இந்த காலத்தில் நாம் அறிய முடியவில்லை. கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். அற்புதம் வாய்ந்த மூலிகைகளின் பயன்களை வளர்ந்து வரும் நவீன யுகமானது அழித்துக் கொண்டே வருகிறது. பல்லவர் காலத்தில் எல்லாம் இந்த கரிசலாங்கண்ணி இலைகளை அரசு அனுமதி இல்லாமல் பறிக்கவே கூடாது என்ற சட்டம் இருந்தது. அப்படி அதை பறித்து பயன்படுத்த வேண்டுமென்றால் அரசுக்கு வரி செலுத்த வேண்டுமென்ற சட்டமும் இருந்தது. அந்த அளவிற்கு இதன் மகிமையை பல்லவர் காலத்து வாழ்ந்தவர்கள் அறிந்திருந்தனர். மறந்துபோன கரிசலாங்கண்ணியின் மகத்துவத்தை இந்த பதிவின் மூலம் நினைவு கொள்ளலாம்.

karisalankanni

வேதிப்பொருட்களும் சத்துக்களும்

இதில்  ஸ்டிக்மாஸ்டீரால், வெடிலோலாக்டோன், எக்லிப்டால், டெஸ்மீத்தைல், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளது. தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ இந்த மூன்று சத்துக்களும் இந்த மூலிகையில் அடங்கியுள்ளது. இந்த கரிசலாங்கண்ணி மூலிகை தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்று சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தங்கச் சத்து இருப்பதால், ஆறுமாதம் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பொலிவு பெறும்.

புண்கள் ஆறுவதற்கு

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அதில் வரும் சாரை எடுத்து வெட்டு காயம், ஆறாத புண்கள் இவைகளின் மீது தொடர்ந்து தடவி வர காயங்கள் ஆறும். அந்த தழும்பும் நாளடைவில் மறைந்துவிடும். இது ஒரு கிருமி நாசினியாகும்.


karisalankanni

பற்கள் உறுதியாகும்

கரிசலாங்கண்ணி பொடியை 75% எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, கிராம்பு, மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சை பழம், இந்துப்பு இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து பொடி செய்து, அந்த பொடியில் பல் தேய்த்து வர பல்லில் ஏற்படும் பிரச்சனைகளும் பல்லின் மஞ்சள் தன்மையும் நீக்கப்பட்டு பற்கள் உறுதி ஆக்கப்படும்.

கருமையான கூந்தல்

அரை லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 50 கிராம் கரிசலாங்கண்ணி துளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெயை வடிகட்டி உபயோகப்படுத்தி வந்தால் தலைமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். பித்த நரைகள் நீங்கும்.

karisalankanni

நோய் எதிர்ப்பு சக்திக்கு

கரிசலாங்கண்ணி இலைகளை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரிசலாங்கண்ணி பொடியுடன் மிளகு ஏலக்காய் தூளையும் சேர்த்து நீரில் கொதிக்கவைத்து மூலிகை தேநீராக பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருவ காலநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மூச்சுத் திணறல் சரியாகும்

நல்லெண்ணெய் 500ml, கரிசலாங்கண்ணிச்சாறு 500ml இவை இரண்டையும் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் 2 வேளை ஒரு தேக்கரண்டி உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

karisalankanni

குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க

எட்டு சொட்டு தேன் உடன் இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணிச் சாற்றை கலந்து குழந்தைகளின் வாயில் தடவினால் அடிக்கடி ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா குணமடைய

கரிசலாங்கண்ணி சூரணத்துடன் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும். பின்பு நான்கு மாதங்கள் கழித்து ஒரு மாதம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயும், சிறுநீரகம் பாதிப்பால் வரும் வெள்ளை வெட்டை நோயும் வராமல் தவிர்க்கலாம். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு மாதம் என்ற கணக்கில் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

karisalankanni

ரத்த சோகை நீங்கும்

இந்த கரிசலாங்கண்ணிச் சாற்றை 100ml தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கி விடும். ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு அதிலா சுரக்கும் அமிலத்தன்மை சீராக படும்.

பெண்களுக்கு ரத்தப் போக்கை குறைக்கும்

கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் 30ml சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதனுடன் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை இரத்தப்போக்கும் குறையும்.

தேள் கடிக்கு மருந்து

கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தேள் கடித்த இடத்தில் பற்றுப்போட்டால் விஷத்தன்மையை முறியும் வீக்கத்தை குறைக்கும்.

karisalankanni

மஞ்சள் காமாலை

கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி அதன் வீக்கத்தையும் இது குறைக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்த இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது.

கரிசலாங்கண்ணி இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து வடிகட்டி அந்தப் பாலை காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். உங்கள் வியாதி சரி செய்யப்பட்ட பின்பு, அதிகமான அசைவ சாப்பாட்டை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆறு மாதங்கள் வரை எளிதில் செரிக்கும் உணவினை சாப்பிட வேண்டும்.