Advertisement

வெந்தயம் மருத்துவ பயன்கள்

வெந்தயம் மருத்துவ பயன்கள்

“உணவே மருந்து மருந்தே உணவு” என்பது நமது சித்த மருத்துவத்தின் சித்தாந்தமாகும். அதனடிப்படையில் நமது நாட்டின் பூர்வீக மூலிகைகள் பல நமது அன்றாட உணவில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று தான் வெந்தயம். இந்த வெந்தயம் பலவகையான உடல்நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வாக உள்ளது அது என்னென்ன என்பதை இங்கு அறியலாம்.

Vendhayam

இதய ஆரோக்கியம்

வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

தோல் நோய்கள்

நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.

Vendhayam

செரிமான கோளாறுகள்

ஒரு மனிதனுக்கு செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் அண்டாமல் நலமாக இருக்க முடியும். உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

Vendhayam

நீரிழிவு

கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.

Vendhayam

சிறுநீரகம்

ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வாய்த்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

Vendhayam

வயிற்று புண்கள்

ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.

vayiru vali

தலைமுடி

தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும். முடி மென்மையாகும்.

Thalai Mudi

தாய்ப்பால் சுரப்பு

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.

vendhayam

புற்று நோய் தடுப்பு

வெந்தயத்தில் உள்ள பல இயற்கை வேதி பொருட்கள் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்க வல்லது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிர தன்மை குறையும்.

vendhayam

மாதவிடாய் பிரச்சனைகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானதே. ஆனால் சில பெண்களுக்கு மட்டும் இது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது. இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயங்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரை அருந்திவர குணம் கிடைக்கும்.

period pain