Advertisement

கற்றாழையை முறையாக இப்படி பயன்படுத்திப் பாருங்கள்! உங்கள் முகத்திற்கு பொலிவூட்ட பவுடர் கூட தேவைப்படாது

கற்றாழையை முறையாக இப்படி பயன்படுத்திப் பாருங்கள்! உங்கள் முகத்திற்கு பொலிவூட்ட பவுடர் கூட தேவைப்படாது

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் கட்டாயமாக ஆர்வம் காட்டுவார்கள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் எத்தனையோ அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அந்த அழகெல்லாம் இயற்கையாக, நிரந்தரமாக நம்மிடமே இருக்குமா? கட்டாயமாக இருக்காது. ஒரு சில மணி நேரத்திற்கு பின்பு வேஷம் கலைந்து போகத்தானே செய்யும். இயற்கையாகவே நம்மை அழகாக மாற்றிக்கொள்ள, இயற்கையான முறையில் என்ன வழியை பின்பற்றலாம்! சுலபமான, ஆரோக்கியமான, இயற்கையான ஒரு வழியைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களை அழகாக மாற்றப்போகும் குறிப்புக்கு செல்வோமா!

katralai

அதற்கு முன்பாக கற்றாழைக்கு உள்ள குண நலன்களைப் பற்றி பார்த்துவிடுவோம். சுற்றுப்புற சூழல், மாசு காரணமாக அதிகப்படியான கிருமிகள் வந்து, நம்முடைய முகத்தில் படிந்து விடுகிறது. தூசுகள், வண்டியில் இருந்து வெளியேறும் புகை இப்படிப்பட்ட பல வகையான மாசுகளும் நம் சருமத்தை பாதிக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

இப்படி இருக்க இயற்கையாகவே, முகத்தில் இருக்கும் மாசுக்களை நீக்கக்கூடிய சக்தியானது இந்த கற்றாழைக்கு உள்ளது. முகம் மாநிறமாக இருந்தாலும், அதை வெள்ளையாக மாற்றும் சக்தியும் இந்த கற்றாழைக்கு உள்ளது. கரும்புள்ளிகளை நீக்கும் சக்தி இந்த கற்றாழைக்கு உள்ளது. கழுத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கும் சக்தியும் இந்த கற்றாழைக்கு உள்ளது.

கற்றாழையில் இருக்கும் வைட்டமின் C, வைட்டமின் E, நம் முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நம்முடைய முகத்தை அழகாக மாற்றுவதற்கு கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லும், அன்றாடம் நம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையும் மட்டுமே போதும்.

முதலில் உங்களது முகத்தை சாதாரண தண்ணீரில், சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கற்றாழை செடியிலிருந்து, சிறிது துண்டு கற்றாழையை உடைத்து எடுத்துக்கொண்டு, அதில் இருக்கும் தோலை மட்டும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லில் சிறிதளவு சர்க்கரை தொட்டு உங்களது முகத்தில் லேசாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அழுத்தமாகப் செய்து விடக்கூடாது. சர்க்கரையின் மூலம் முகத்தில் கீரல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெறும் 3 நிமிடம் மட்டும் உங்கள் கைகளை வைத்து லேசாக ஸ்கரப் செய்தால் போதும்.

அதன் பின்பு உங்கள் முகத்தில் இருக்கும் ஜெல்லை, 10 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் லேசாக தேய்த்து முகத்தை கழுவி விடுங்கள். உங்களது சருமம் மேலும் பொலிவு பெற ஒரு பேக் போடவேண்டும். அந்த கலவையை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் முல்தானி மெட்டி, தக்காளி பழச்சாறு, காய்ச்சாத பசும்பால். பசும்பால் கிடைக்காதவர்கள் சாதாரண பேக்கட் பாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி தூள், 2 ஸ்பூன் தக்காளி பழச்சாறு, கலவையை கலக்க தேவையான பால் இவை மூன்றையும் பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும். கீழிருந்து மேல் பக்கமாக முகத்தில் தடவ வேண்டும்.


முகத்தில் தடவிய அந்த பேக்கை 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரால் கழுவி விடவேண்டும். சோப் உபயோகப்படுத்தக் கூடாது. சாதாரண தண்ணீரில் கழுவித் துடைத்தால் போதும். இதை ஒருமுறை செய்த பின்பே நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும். வாரம் இரண்டு முறை, மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு முறைகளையும் செய்தாலே போதும். உங்கள் முகம் அழகான பொலிவைப் பெறும். பவுடர், க்ரீம் இவைகள் போடாமலேயே உங்களது முகம் பளபளப்பாக மாறிவிடும்.