Advertisement

லோ சுகர் அறிகுறிகள்

லோ சுகர் அறிகுறிகள்

தலைச்சுற்றல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது பலருக்கும் தலை சுற்றல் ஏற்படும். சிலருக்கு லேசான தலைவலி கூட இருக்கும். மயங்கி விழக்கூடிய சூழலும் ஏற்படும். லோ சுகர் அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

thalaivali

வியர்வை

குறைந்த அளவு சர்க்கரை இருப்பவர்களுக்கு உடல் வெப்பமடையா நிலையிலும் வியர்வை அதிகம் வெளியேறும். இதன் காரணமாக உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு பாதிப்பு சற்று கடுமையாகலாம்.

கைகால் மற்றும் உடல்நடுக்கம்

உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும் அது ரத்தத்தில் குறையும் நேரத்தில் பலருக்கும் கைகால் மற்றும் உடல் குளிரால் பாதிக்கப்பட்டது போல் நடுக்கம் ஏற்படும்.

உதடு மற்றும் நாக்கு

ரத்த சர்க்கரை அளவு குறையும் போது உதடுகள் மற்றும் நாக்கு உலர்ந்து போய்விடும் நிலை ஏற்படுகிறது.அந்த உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படும்.

உடல் சோர்வு இந்த

குறைந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உடல் சோர்வை அடைவர். இவர்கள் எந்த ஒரு செயலையும் அதிக நேரம் செய்ய முடியாது.

Pregnancy symptoms

மனக்குழப்பம்

இப்பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மனம் ஒரு குழப்ப நிலையில் இருக்கும். மனதில் எனென்னமோ எண்ணங்கள் தோன்றும். சிலருக்கு தூக்கமின்மையும் ஏற்படும்.

பசி

ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக குறைந்தவர்களுக்கு அளவுக்கதிகமான பசி இருக்கும். அவ்வப்போது எதையாவது உண்ண வேண்டும் என விரும்புவார்கள்.

food

வயிற்று கோளாறுகள்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது சிலருக்கு வயிறு புரட்டுவது போன்ற உணர்வு அதிகம் ஏற்படும். ஒரு சிலர் வாந்தி எடுக்கக்கூடிய நிலையையும் உண்டாக்கும்.

கவனமின்மை

இப்பிரச்சனையால் அவதியுறும் நபர்களில் பலருக்கு தாங்கள் செய்யும் செயல்களில் அதிக ஈடுபாடு இல்லாமல், கவனமில்லாமல் செயலாற்ற கூடிய நிலை ஏற்படும். சிலருக்கு பேச்சு குழறும்.