Advertisement

நாவல் பழம் நமது உடலுக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

நாவல் பழம் நமது உடலுக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் எண்ணற்ற வகையான பழங்கள் விழைகின்றன. இவைகளில் பெரும்பாலானவை மனிதர்கள் உண்ண தகுந்தவையாகவும், அவர்களின் உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் இருக்கிறது. பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. இந்த நாவல் பழங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

நாவல் பழம் நன்மைகள்

சர்க்கரை வியாதி

பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பலம் என்று பெரும்பாலான மக்கள் அறிந்து வைத்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

ஹீமோகுளோபின் 

மனிதர்களின் ரத்தம் சிவப்பு நிறம் பெறுவதற்கும், சத்துகளை உடல் முழுவதும் பரவச்செய்வதற்கும் ஹீமோகுளோபின் எனப்படும் புரததத்தால் ஆன வேதிப்பொருள் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும். நாவல் பழத்தில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.

இதய நோய்கள் 

இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். நாவல் பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

ஈறுகள், பற்கள் 

நாவல் பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாவல் பழங்களை நன்றாக சாறு பிழிந்து அந்த சாற்றில் சிறிது உப்பு கலந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

வயிற்று போக்கு 

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளாலும், உடல் உஷ்ணம் மற்றும் சுற்றுப்புற வெப்ப நிலை அதிகரிப்பால் ஒரு சிலருக்கு சாதாரண வயிற்று போக்கு முதல் சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுகிறது. இப்படி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட சமயங்களில் நாவல்பழங்களை பழங்களாகவோ அல்லது சாறு பிழிந்தோ சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கை நிறுத்தி வயிற்றில் தங்கியிருக்கும் நச்சுகள், கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்றும்.

பெண்களின் மலட்டுதன்மை 

திருமணமான பல பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுவது இக்காலங்களில் அதிகரித்து வருகிறது. கருப்பையில் சினைமுட்டைகள் வளர்ச்சிபெறாமல் இருப்பது, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவற்றின் காரணமாக பெண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது. நாவல் பழங்களை பழமாகவோ அல்லது ஜூஸ் போட்டு தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுதன்மை தீரும்.

சுவாச பிரச்சனைகள் 

ஒவ்வாமையால் ஆஸ்துமா எனப்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. நாவல் பழங்களை தினமும் காலை வேளையில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறையும், ஜுரத்தினால் ஏற்பட்டிருக்கும் வறட்டு இருமலையும் போக்கி சுவாச பிரச்சனைகளை போக்கும்.

ஊட்டச்சத்து 

நாவல் பலம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புசத்து, பாஸ்பரஸ், ரைபோபிளவின், தயாமைன் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

கல்லீரல் 

ஒரு சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் வீக்கம் ஏற்படுகிறது. இவற்றை களைவதில் நாவல் பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலையில் சிறிது உப்பு சேர்த்த நாவல் பழங்களை சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் ஏற்பட்டிருக்கும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைத்து, அந்த உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

வெண்புள்ளிகள் 

ஒரு சிலருக்கு தங்களின் சருமத்தில் வெள்ளை நிற புள்ளிகள் ஏற்பட்டு அவர்களின் உடல் அழகை கெடுக்கிறது. இவர்கள் தினமும் நாவல்பழங்களை சாப்பிட்டு வந்தால் தங்களின் உடலில் தோலின் நிறத்தை மேம்படுத்தும் மெலனின் என்கிற புரத சத்தை அதிகம் ஊக்குவித்து தோலில் ஏற்பட்டிருக்கும் வெள்ளை புள்ளிகளை மறைய செய்யும். தோலின் பளபளப்பு தன்மையையும் கூட்டும்.