ஆரஞ்சு பழம் பயன்கள்
பழங்களில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில பழங்கள் மட்டும் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அப்படியான ஒரு பழம் தான் “ஆரஞ்சு” பழம். தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வளர்த்து ஆரஞ்சு பழங்களை சாப்பிடுகின்றனர். இந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழம் பயன்கள்
விந்தணுக்கள்
ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகும் போது ஆண்களுக்கு மலட்டுதன்மை நீங்கவும், ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் வழிவகை செய்கிறது.
இதய நோய்கள்
இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
ஈறுகள், பற்கள்
ஆரஞ்சு பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
ஊட்டச்சத்து
ஆரஞ்சு பழம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
கண்பார்வை
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
சரும நலம்
ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். ஆரஞ்சு பழ சுளைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வருவது நல்லது. காலை மற்றும் மதிய வேளைகளில் ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்புகள்
உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும். ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த அழுத்தம்
30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும்.ஆரஞ்சு பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.
சிறுநீரக கற்கள்
சிலர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது. சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு
எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் இரண்டு ஆரஞ்சு பழ சுளைகள் சாப்பிடுவது அவசியமாகும். அல்லது மதிய வேளைகளில் ஆரஞ்சு பழத்தை சாறு பிழிந்து அருந்துவதும் நல்ல பலனை தரும்.
உடல்வெப்பம்
கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் ஆரஞ்சு அதிகம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது.