இஞ்சி பயன்கள்
நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் சுவையை அதிகரிக்கவும் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகவும், நோய்கள் நீங்கவும் பல வகையான உணவு பொருட்கள், உணவில் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன. அப்படி இன்று உலகும் முழுவதும் சமையலில் அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாக “இஞ்சி” இருக்கிறது. இஞ்சி என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
இஞ்சி பயன்கள்
வலி நிவாரணம்
பலருக்கும் கடுமையான உழலுழைப்பு மற்றும் அடிபடுதல் காரணமாக உடலின் தசைப் பகுதிகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. வலி கடுமையாக இருக்கும் நாட்கள் தோறும் காலையில் இஞ்சி அல்லது இஞ்சி கலந்த உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு உடலில் கடுமையான வலிகள் நீங்குகிறது. குறைந்த பட்சம் இந்து நாட்களாவது இஞ்சியை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அனைத்து வலிகளும் நீங்கும்.
மாதவிடாய்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் ஒரு இயற்கையான உடல்சார்ந்த ஒரு விடயமாகும். உடல்நலத்தில் சாரியாக அக்கறை காட்டாத பெண்களுக்கு மட்டும், இக்காலங்களில் அடிவயிற்றில் மிக கடுமையான வலி ஏற்படுகிறது. இக்காலங்களில் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் இருக்கும் மெபனமிக் அமிலம் மாதவிடாய் கால வலியை குறைப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது.
ஒவ்வாமை
ஒரு சில நபர்களின் நிண நீர் சுரப்பிகள் அவர்களின் உடல் சில பொருட்களை உட்கொள்ளும் போதோ, சுவாசிக்கும் போதும் அப்பொருட்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றும் ரசாயனங்களை உடலில் உற்பத்தி செய்வதால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் அவ்வப்போது இஞ்சி சாப்பிட்டு வந்தார்களேயானால் அவர்களின் ஒவ்வாமை நீங்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
வயிறு
உடல்நலம் குன்றியிருக்கும் சமயங்களில் ரசாயனங்கள் நிறைந்த மருந்து, மாத்திரைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் புண்கள், ஜீரண குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் காலையில் சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்ட இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.
வாந்தி
நமது உடலில் ஆங்கிலத்தில் வேகல் நெர்வ் எனப்படும் வேகல் நரம்பு தான் வயிற்றில் செரடோனின் அமிலங்களை அதிகம் சுரக்கச்செய்து ஒரு சிலருக்கு அவ்வப்போது வாந்தி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இஞ்சியை தினந்தோறும் சாப்பிடும் நபர்களுக்கு இந்த வேகல் நரம்பு தூண்டப்படுவது குறைந்து அடிக்கடி வாந்தி ஏற்படும் நிலை நீங்கும்.
கல்லீரல்
நிறைந்த உணவுகளை செரிக்க தேவையான என்சைம்களை அதிகம் உற்பத்தி செய்வதாலும், வீரியமிக்க மருந்துகள் அதிகம் அருந்துவதாலும், எரிசாராயம் உள்ள மதுவகைகள் அருந்துவதாலும் கல்லீரலின் செயல்பாடு தொய்வடைகிறது. கல்லீரலை மீண்டும் பலம் பெற செய்ய தினந்தோறும் இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் அது இழந்த சக்தியை மீண்டும் பெறும்.
கிருமி நாசினி
இஞ்சி இயற்கையிலேயே நன்மையான அமிலங்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். இதிலிருந்து வெளிப்படும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் எப்படிப்பட்ட கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இஞ்சியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தம், செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவர்களின் உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை சத்தின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் வைத்திருக்கும் அரும்பணியை இஞ்சி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இஞ்சி மற்றும் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படுவதோடு, பிற நோய்கள் ஏதும் அவர்களை அண்டாமல் காக்கும்.
முடக்குவாதம்
நடுத்தர வயதுடையவர்கள் பலரையும் தாக்கும் நோயாக முடக்குவாத நோய் இருக்கிறது. இந்நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவ்வப்போது உடலின் அனைத்து மூட்டுப்பகுதிகளும் விரைத்து கொண்டு, உடலை முழுவதுமாக இயங்கவிடாமல் செய்துவிடுகிறது. இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்த முடக்குவாத நோயாளிகள் பலருக்கும், முடக்குவாத பிரச்சனை சிறிது சிறிதாக குறைந்ததாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சளி
மழை மற்றும் குளிர் காலங்களில் பலரையும் பாதிக்கும் நோயாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கிறது. இதை போக்குவதற்கு வீரியமிக்க மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு இஞ்சியை வேகவைத்த நீரை நாம் அருந்தும் தேநீரில் கலந்து பருகி வந்தால் சீக்கிரத்தில் ஜலதோஷ பிரச்சனை நீங்கும்.