Advertisement

உங்கள் வீட்டு தோசையும் மொறுமொறுவென்று இருக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு தோசையும்  மொறுமொறுவென்று இருக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவருடைய வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்களது சாமர்த்தியத்தை சமையலறையில் காட்டினாலே போதும். சுவையான சமையலுக்கு மயங்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?. சில வீடுகளில் எல்லாம் சமையலறை யார் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற சண்டை கூட வரும். ஒரு வீட்டில், ஒரு பெண் இருந்தால் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதாவது மாமியார், மருமகள் அல்லது ஒரு வீட்டில் இரண்டு மருமகள் இப்படி இருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் பிரச்சனை தான். ஏனென்றால் இவர்களில் யார் சமையலறையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வது? நீயா? நானா? என்ற பிரச்சனை கண்டிப்பாக அந்த வீட்டில் இருக்கும். அவ்வளவு சீக்கிரமாக ஒரு பெண் தன்னுடைய சமையலறையை மற்றவருக்கு விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட சமையலை நாம் சிறப்பாக செய்வதுதானே தர்மம். நீங்கள் செய்யும் சமையலை இன்னும் சிறப்பாக செய்து உங்களின் ஆதிக்கத்தை உங்கள் வீட்டில் வலுவாக நிலைநாட்ட இந்த டிப்ஸையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

cook1

நம் வீட்டில் அத்தியாவசியமாக செய்யப்படும் உணவுப் பட்டியலில் தோசைக்குத் தான் முதலிடம். இந்த தோசையானது நம் வீட்டில் செய்தால் மொறுமொறு வென்று வரவே வராது. அது அடுத்தவர்களது வீட்டில் சென்று சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சிறப்பாக இருக்கும். நம் வீட்டில் மட்டும் ஏன் இப்படி வரவில்லை? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். மொறுமொறுவென்று தோசை எப்படி சுடுவது என்பதற்கான சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இட்லி செய்யும் மாவில் தோசை ஊற்றுவதை விட, தோசை கென்று தனி மாவை அரைப்பது மிகவும் சிறந்த ஒன்று. ஏனென்றால் தோசைக்கு அரைக்கும் மாவில் வெந்தயம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து, ஒரு பங்கு பச்சரிசி சேர்த்து, இரண்டு பிடி அவல் சேர்த்து அரைத்தால் தோசை நன்றாக சிவந்தும், மொறுமொறுவென்றும் வரும். அரைத்த மாவில் வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமலே மாவு புளிக்காமல் நன்றாக இருக்கும்.

dosai-maavu

தோசையை கல்லில் ஊற்றும் போது, சரியாக வரவில்லை என்றால் சிறிதளவு புளியை எடுத்துக்கொண்டு எண்ணெயில் நனைத்து தோசைக்கல்லை நன்றாக சூடாக்கி, அதில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். அல்லது ஒரு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை இரண்டாக வெட்டி தோசைக்கல்லில் சூடு பறக்க, 1/4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக தேய்த்தால் தோசை, கல்லில் ஒட்டாமல், உடையாமல் முழுமையாக கிடைக்கும்.

சப்பாத்தி செய்யும் போதும், பிரட் ரோஸ்ட் செய்யும் போதும் கல் நன்றாக சூடாகி விடும். இதனால் அதே கல்லில் தோசை ஊற்றுவதில் சிறிது சிரமம் இருக்கும். உங்களால் முடிந்தால் தோசைக்கு என்று தனி கல்லை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் Non-Stick கல்லிற்கு உபயோகப்படாது.

crispy-dosa

இட்லி மாவில் தோசை ஊற்றுபவர்களாக இருந்தால், அந்த மாவை கொஞ்சம் தனியாக எடுத்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிய பின்பு தோசை ஊற்றினால் நன்றாக சிவந்து வரும். ஒரு தோசை செய்வதற்கு எவ்வளவு டிப்ஸ் என்று யோசிக்காதீர்கள்! சுவையான தோசையை செய்து வீட்டில் இருப்பவர்களது மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் இவை அனைத்தையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும். சமையலறையை உங்கள் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த குறிப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.