Advertisement

காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள், நன்மைகள் என்ன தெரியுமா?

காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள், நன்மைகள் என்ன தெரியுமா?

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ள கூட்டு, பொரியல் ஆகியவை செய்வதற்கு ஏற்ற ஒரு காய் வகையாக காலிபிளவர் இருக்கிறது. மிகப் பழங்காலத்திலிருந்து காலிப்ளவர் பல நாடுகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காலிபிளவரில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்குமேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது என்பது சமையல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை காலிபிளவருக்கு அதிகமுண்டு. இத்தனை அற்புதமான இயற்கை உணவாக இருக்கும் காலிபிளவரின் இன்ன பிற பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

cauliflower

காலிபிளவர் பயன்கள்

புற்று நோய் தடுப்பு 

காலிபிளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் காலிப்ளவர் சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை காலிபிளவர் கொண்டிருக்கிறது.

இதயம் 

உலகில் இன்று பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்குப் பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

cauliflower

குழந்தை மூளை வளர்ச்சி 

காலிபிளவரில் கோலைன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் டி சத்தை சேர்ந்ததாகும். கோலைன் சத்து மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. கோலைன் அதிகம் நிறைந்துள்ள காலிஃபிளவர்களை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபகத் சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மூட்டு வலி, வீக்கம் 

காலிஃப்ளவரில் பீட்டா- கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை ரத்தத்தில் பிராண வாயு கிரகிப்பதை அதிகரித்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. மேலும் காலிபிளவரில் பியூரின் வேதிப்பொருள் அதிகம் இருக்கின்றன. உடலில் மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்டவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் அவர்களின் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது.

cauliflower

உடல் எடை குறைய 

ஒவ்வொருவரின் உடல் எடையும் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற அளவில் இருப்பதே சரியானதாகும். ஆனால் இன்று பலருக்கும் அதீத உடல் எடை பிரச்சனை இருக்கிறது. உடல் எடையை சீக்கிரம் குறைக்க குறிப்பிட்ட சில சத்துக்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். காலிபிளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. காலிபிளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடலின் வளர்சிதைமாற்றப் திறனை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

நச்சு தன்மை 

இன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள் பல வகையான நச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது. காலிபிளவரில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை நிறைந்திருக்கும் காலிபிளவரை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.

cauliflower

எலும்புகள் வலிமை பெற 

நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது. காலிபிளவரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை காலிபிளவர் பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.

சிறுநீரகங்கள் 

நமது இரத்தத்தில் இருக்கும் அனைத்து கழிவுகளையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் சிறப்பாக இருக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலிபிளவரில் பைட்டோ கெமிக்கல் வேதிப் பொருட்கள் நிறைந்துள்ளன. காலிபிளவர்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.

cauliflower

கண்பார்வை 

அதிகம் நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. வயது மூப்பு காரணமாக அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. காலிபிளவரை சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அதோடு எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

ஹார்மோன்கள் 

மனித உடலின் பல செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன்களே ஆகும். இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இருக்க ஆன்ட்டி – ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காலிபிளவர் அதிகம் சாப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் சமநிலை இல்லாத தன்மையை சீர் செய்யும் ஆற்றல் காலிபிளவரில் அதிகம் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் இன்னபிற வேதிப்பொருட்கள் கொண்டிருக்கிறது.