OMTEX AD 2

ஜாதிக்காய் மருத்துவ பலன்கள்

ஜாதிக்காய் மருத்துவ பலன்கள்

உலகில் வேறெங்குமே காண முடியாத பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மூலிகை தான் ஜாதிக்காய். இது நமது நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே அதிகம் விளைகிறது. சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவ நூல்களிலேயே ஜாதிக்காயின் பயன்பாடு குறித்த குறிப்புக்கள் இருக்கின்றன. ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன. இந்த ஜாதிக்காயின் பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jathikkai

தூக்கமின்மை பிரச்சனை

ஜாதிக்காயை நன்கு தூளாக அரைத்து கொண்டு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பசும்பாலில் அரை தேக்கரண்டி அளவு கலக்கி சாப்பிட்டு வர தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு நன்றாக தூக்கம் வரும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு அது நீங்கும்.

குழந்தைகள் மருத்துவம்

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த ஜாதிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று போக்கு ஏற்படும் அப்போது இந்த ஜாதிக்காய் தூளை மிகவும் குறைந்த அளவில் பசுப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று போக்கு குணமாகும். மேலும் தூங்காமல் அழுது கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஜாதிக்காய் தூளை சூடான பாலில் கலந்து கொடுக்க பலன் கிடைக்கும். குழந்தைகளை தூங்க வைக்க இதை தினந்தோறும் எல்லாம் தரக்கூடாது. அதோடு இதை அதிக அளவிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் தர கூடாது.

Jathikkai

ரத்த சுத்தி

ஜாதிக்காய் சற்று அமிலத்தன்மை மிக்க ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயாகும். எனவே இதை அவ்வப்போது பாலில் கலந்து உட்கொள்ள ரத்தத்தில் உள்ள விஷ கழிவுகளை நீக்கி, கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து ரத்தத்தை சுத்தமாக்குகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூடுகிறது.

Jathikkai

வயிற்று பிரச்சனைகள்

நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் ஆக வயிறு குடல் மற்றும் இதை செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்றில் அமில சுரப்பு கோளாறுகள் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இவர்கள் ஜாதிக்காய் தூளை சிறிது பால் அல்லது பால் கலக்காத தேநீருடன் அருந்தி வர இப்பிரச்சினைகள் நீங்கும். குடல்களில் பூச்சி தொல்லைகளால் அவதியுறும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதே முறையில் உட்கொள்ள குடல்புழுக்கள் நீங்க பெறுவார்கள்.

Jathikkai

ஆண்மை பெருக்கி

இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு மனஅழுத்தம் அதிகமிருக்கிறது. இது அவர்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் தினமும் இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை அரைத்து, பசும்பாலில் கலக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் தூளை சேர்த்து ஒரு மண்டலம் அல்லது 48 நாட்கள் அருந்த நரம்புகள் வலுப்பெற்று ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மை நீங்கும்.

OMTEX CLASSES AD