Advertisement

சோளத்தில் இருக்கும் நாரின் பயன்கள்

சோளத்தில் இருக்கும் நாரின் பயன்கள்

இயற்கை நமக்கு வரமாக அளித்த பல தானிய பொருட்களுள் சோளக்குருத்தும் ஒன்று. அழகான ஆரஞ்சு நிற முத்துக்களை வரிசையாக உள்ளே பதுக்கி வைத்து, மேலே இரண்டடுக்கு நாரின் பாதுகாப்புடன், இயற்கையாகவே வளர்கின்றது. இந்த சோளமானது நமது ஊர் சந்தைகளில் சுலபமாகவே நமக்கு கிடைக்கக்கூடியது. சுலபமாகவும், விலை குறைவாகவும் கிடைத்தாலே அதற்கான மகிமைகள் குறைவு என்று நம் மனதில் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சோளத்தில் உள்பகுதியில் இருக்கும் நாருக்கு எத்தனை உபயோகங்கள் உள்ளது என்பதை நாம் அறிந்து இருக்கின்றோமா. அதை எடுத்து குப்பையில் போட்டு விடுகின்றோம். குப்பையில் தூக்கி வீசப்படும் இந்த நாரிற்கு எத்தனை பலன்கள் என்று பாருங்கள்.

 corn-fiber

சோளத்தில் உள்ள சத்துக்கள்

சோள நாரில் அதிகப்படியான புரோட்டீன், கார்போஹைட்ரேட், மினரல், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் K அதிகமாக அடங்கியுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

சர்க்கரை நோய் உள்ளவர்களில் சிலபேருக்கு உடலின் எடை அதிகமாக இருக்கும்.  உடலின் எடையைக் குறைத்து இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்க இந்த சோள நார் தேநீர் பயன்படுத்தப்படுகிறது.

 corn-fiber

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதன் காரணமாக நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சோள நாரானது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நமக்கு நன்மையை அளிக்கிறது. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணிக்க வைக்கிறது.

சிறுநீரக கற்கள் கரைய

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறுநீர் கல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வந்துவிடுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் கரையாத மினரல்கள் ஒன்றாக சேர்ந்து கற்கள் உருவில் மாற்றப்படுகிறது. இதனால் நமக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும். அதனைக் கரைக்க சோள நார் தேநீர் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் இருந்தால், அதனை நீக்கி சிறுநீர் சுலபமாக வெளியேற உதவி செய்கிறது.

 corn-fiber

காயத்தால் ஏற்படும் இரத்தப்போக்கு

சிலருக்கு காயம் ஏற்பட்டால் அதில் ஏற்படும் இரத்தப் போக்கானது சட்டென்று நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். இந்த சோள நாரில் விட்டமின் K சத்தானது அதிகமாக உள்ளது. இந்த சத்து நம் உடலில் உள்ள ரத்தத்தை உடனடியாக உறைய செய்யும் தன்மையை நமக்கு அளிக்கின்றது. காயத்தினால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.

பெண்களுக்கு

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பில் கால்சியத்தின் சத்து சத்தானது குறைந்துவிடும். எலும்பிலுள்ள கால்சியத்தை தக்க வைத்துக் கொள்ள சோளத்தில் உள்ள நார்ச்சத்தானது பயன்படுத்தப்படுகிறது.

 corn-fiber

ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை குறைக்க சோள நார் தேநீரை குடித்து வரலாம். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தமானது குறைக்கப்பட்டு மோசமான விளைவுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

சோள நார் தேநீர்

சோளத்தில் உள்ள நாரினை எடுத்து நன்றாக கழுவி இரண்டு கப் நீரில், இரண்டு ஸ்பூன் சோள நாரை நன்றாக கலந்து 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி அதனை தேநீராக குடித்து வரலாம். இப்படி சோள நாரை தேநீராக குடித்து வந்தால், மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளில் இருந்தும், இதய பாதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

 corn-fiber

இதனை குடிப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

1. சோள நார் தேநீரை உட்கொள்வது பாதுகாப்பானது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கவலை ஏதும் இல்லாமல் இதை குடித்து வரலாம் இருப்பினும் அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன் சிலவற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

2. இந்த தேநீரை நாம் அருந்தும் போது ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் தோல் பிரச்சினைகள் மற்றும் அலர்ஜி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

corn-fiber

3. நீங்கள் கர்ப்பமாக உள்ளவர்கள் என்றால் கரு கலைவதற்கு சில வாய்ப்புகள் உண்டு. இந்த தேநீர் குடிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

4. நீங்கள் சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உடையவர்களாக இருந்து, மருந்துகள் உட்கொண்டு வந்தால் அந்த சமயத்தில், இந்த தேநீரையும் குடித்து வந்தால் உங்களின் சர்க்கரை அளவை இரத்தத்தில் மிகவும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் மருத்துவரிடம் ஆலோசித்த பின் தேநீர் பருகி வரவேண்டும்.

சரியான முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த சோள நாரினை பயன்படுத்தி வந்தால் நம் முழுமையான பலன்களை அடைய முடியும்.