Advertisement

கடுக்காய் எத்தனை மருத்துவ குணங்களை கொண்டது தெரியமா?

கடுக்காய் எத்தனை மருத்துவ குணங்களை கொண்டது தெரியமா?

பல வகையான அறிய வகையான மூலிகைகள் நமது நாட்டில் அதிகம் விளைகின்றன. இவற்றில் பலவும் அக்காலம் முதலே நமது நாட்டின் பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பயன்படுத்தபட்டு வந்திருக்கிறது. “கடுக்காய்” அப்படிபட்ட மூலிகைகளில் ஒன்று. இந்த கடுக்காயில் அக்காயின் மேற்புற தோல் ஓடுகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சு தன்மை வாய்ந்தவை எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது. கடுக்காயால் ஏற்படும் வேறு பல நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளாலாம்.

கடுக்காய் பயன்கள்

உடல் பலம்

இன்றைய தலைமுறையினர் தங்களது உடலை பலப்படுத்த நோய்களை ஏற்படுத்தும் ரசாயனங்கள் மிகுந்த ஊட்டச்சத்து உணவுகளை உண்கின்றனர். இதற்கு பதிலாக தினமும் இரவு சாப்பிட்டு முடித்ததும் கடுக்காயின் ஓடுகளை பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு, ஒரு கோப்பை நீர் அருந்தி வர உடல் வலிமை பெரும். மிகுந்த ஆற்றல் உடலில் உண்டாகும்.

ஜீரண சக்தி

பொதுவாகவே சிலருக்கு மற்றவர்களை காட்டிலும் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு குறிப்பிட்ட வகையான உணவுகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டால் மட்டுமே ஜீரணம் ஆகும். கடுக்காய் தோலை சிறிதளவு எடுத்து அதனுடன் இஞ்சி,மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி வயிறு சுத்தமாகும்.

kadukkai 1

வாதம், பித்தம்

ஆயுர்வேத மருத்துவம் படி மனிதர்களின் உடலின் வாதம், பித்தம், கபம் என்று மூன்று தோஷங்கள் இருக்கின்றன. இதில் வாதம் மற்றும் பித்த தோஷங்கள் நமது உடலில் அதிகம் ஆகும் போது வாயு கோளாறுகள், வாத வலி, பித்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடுக்காய் தூளை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அதே அளவு சுக்கு, திப்பிலி தூள்களை கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத,பித்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

பல் பிரச்சனைகள்

பற்களின் இடுக்குகளில் உணவு பொருட்கள் மாட்டிக்கொள்வதால் அது அங்கேயே தங்கி அதிகம் கிருமிகளை உற்பத்தி செய்து பற்கள், ஈறுகளில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கடுக்காய், கொட்டை பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி, அந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பற்கள், ஈறுகள் சம்பந்தமான அணைத்து பிரச்னைகளும் நீங்கும்.

புண்கள், காயங்கள்

ரத்தம் ஏற்படும் அளவு ஏற்படும் காயங்களில் நுண்கிருமிகள் தொற்றாத வாறு பாதுகாப்பது அவசியமாகும். ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிவது நின்ற பிறகு, அந்த காயத்தின் மீது கடுக்காய் பொடியை தூவுவதால் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். ஏற்கனவே இருக்கும் புண்களின் மீதும் கடுக்காய் பொடியை தூவி வந்தால் புண்கள் சீக்கிரம் ஆறும்.

பேன், பொடுகு

தலைமுடியில் குறிப்பாக இளம் வயதினர், மற்றும் நடுத்தர வயதினருக்கு பேன், பொடுகு போபண்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. ஒரு சட்டியில் ஒரு கோப்பை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதில் மூன்று கடுக்காய்களை போட்டு, காய்கள் பிளந்து கொள்ளும் அளவிற்கு காய்ச்சி, பின்பு அந்த எண்ணையை ஒரு புட்டியில் போட்டு அடைத்து, அதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன், பொடுகு போன்ற தொல்லைகள் நீங்கும்.

தோல்

சிலருக்கு பல வகையான உலோகங்களாலான நகைகளை அணிவதால் உடலில் அரிப்பு, புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. ஒரு கடுக்காயை எடுத்துக்கொண்டு அதை சந்தனகட்டையை தேய்க்கும் கல்லில் விட்டு சில துளிகள் நீர் விட்டு தேய்த்த பின்பு கிடைக்கும் பசையை எடுத்து, தோலில் புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு

மேல்நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கடுக்காய் நீரிழிவு நோயாளிகளின் நோய் பாதிப்பின் தீவிர தன்மையை குறைப்பதில் பேருதவி புரிகிறது என கண்டறிந்துள்ளனர். நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.

மனநலம்

நமது பண்டைய ஆயுர்வேத நூல்களிலேயே கடுக்காய் மனிதர்களின் மனநலத்தை மேம்படுத்துவதில் பேருதவி புரிகிறதுது என்பதை கண்டறிந்துள்ளனர். கடுக்காய் உடல் மற்றும் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய எதிர்மறை சக்திகளை அறவே நீக்கும் திறன் கொண்டது. கடுக்காயை மருந்தாக அவ்வப்போது சாப்பிட்டு வருபவர்களுக்கு மன நலம் சிறப்பாக இருக்கும்.

ரத்த சுத்தி

கடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது. கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.