கடலைமாவை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி மட்டும் பயன்படுத்தாதீர்கள். முகத்தின் அழகு சீக்கிரமே குறைந்து போகும்.
நம்முடைய முக அழகிற்காக தினம்தோறும் கடலைமாவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஆனால், சில பேருடைய சருமம் வறட்சி தன்மை கொண்டதாக இருந்தால், கடலைமாவை நேரடியாக முகத்தில் தடவிக் கொள்ள கூடாது. இது முகச் சுருக்கத்தை ஏற்படுத்தி முக அழகு குறைவதற்கான வாய்ப்பைத் தேடி தந்துவிடும். ஆக, கடலைமாவை முறையாக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வறட்சி சருமம் கொண்டவர்களாக இருந்தாலும், எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்களாக இருந்தாலும், இல்லை இரண்டிற்கும் பொதுவான சருமம் உடையவர்களாக இருந்தாலும், இந்த முறையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான பொருட்கள் கடலைமாவு, பழுத்த தக்காளி, தயிர், தேன் இவைகள் மட்டும் தான்.
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு போட்டு, பழுத்த தக்காளி விழுதை சேர்த்து, 1/4 கப் தயிர் ஊற்றி, ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். கடலை மாவில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர், தக்காளி பழ விழுதை சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்வது மிகவும் நல்லது.
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த விழுதினை, முகத்தில் பேக் போட்டு விட்டு, 1/2 மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இந்த பேக்கை உங்கள் முகத்திற்கு போடுவதற்கு முன், சுடு தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து, அந்த வெதுவெதுப்பான துண்டினை முகத்தில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் போடும் எந்த பேக்காக இருந்தாலும் விரைவாக ஒரு நல்ல பலன் கொடுக்கும். உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள், இப்படி முகத்தில் பேக் போட்டு கொள்ளலாம்.
சரும பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்த பின்பு வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த முறையை பின்பற்றி கொண்டால், போதுமானது. முகமானது சீக்கிரமாகவே வெண்மை நிறமாக மாறுவதற்கு இந்த முறை மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.