முறையற்ற மாதவிடாய் பிரச்சனை தீர பாட்டி வைத்தியம்
பெண்களுக்கு அவர்களின் கருப்பையில் கருவுராத சினைமுட்டைகள் ரத்தத்தில் கலந்து 28 நாட்களுக்கு ஒரு முறை வெளியேறுவது மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்றழைக்கின்றனர். இந்த 28 நாட்களுக்கு ஒன்று இரண்டு நாட்கள் கூடுதலாக கழிந்த பிறகும் மாதவிடாய் வெளியேறுவது இயல்பானது. ஆனால் 35 நாட்களுக்கும் அதிகமான காலத்திற்கு பிறகு வெளியேறுவது முறையற்ற மாதவிடாய் என கருதப்படுகிறது. இது ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள் மற்றும் இதற்கான வீட்டு வைத்திய குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
முறையற்ற மாதவிடாய் காரணம்
பல பெண்களுக்கு ஏற்படும் இந்த முறையற்ற மாதவிடாய்க்கு அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாற்றங்களே காரணாமாக இருக்கிறது.
சீரற்ற மாதவிடாய் அறிகுறிகள்
இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகளவு கூடுதல் அல்லது அதிகளவு குறைதல் போன்றவை ஏற்படும். அதோடு பசியின்மை,
மனம் அமைதியின்றி அதிக உணர்ச்சிவசப்படும் நிலை போன்றவை சில அறிகுறிகளாகும்.
மாதவிடாய் பாட்டி வைத்தியம் குறிப்புக்கள்
இஞ்சி
இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணமிக்க அமிலங்கள் உடலின் ஹார்மோன் சுரப்புகளை சரிசெய்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் கருப்பை சம்பந்தமான அனைத்து குறைபாடுகளையும் போக்குகிறது. இஞ்சி கலந்து செய்யப்படும் உணவுகளில் இஞ்சி துண்டுகளை நன்கு மென்று உண்ண வேண்டும்.
ஏலக்காய்
நமது நாட்டில் விளையும் ஏலக்காய் பல நோய்களை போக்கும் மருத்துவ குணங்களை கொண்டது. இந்த ஏலக்காய்கள் சிலவற்றை பச்சையாகவும் அல்லது பொடி செய்து பால் கலக்காத தேநீரில் கலந்து அருந்தி வர முறையற்ற மாதவிடாய் நீங்கும்.
ஆப்பிள் வினிகர்
தற்போது நவீன அங்காடிகளில் ஆப்பிளில் இருந்து செய்யப்பட்ட வினிகர் கிடைக்கிறது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு பச்சைக்காய் தண்ணீரில் கலந்து அதில் சிறிது தேன் விட்டு நன்கு கலக்கி, குடிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அன்னாசி பழம்
சற்று வெப்பத்தன்மையை கொண்ட அன்னாசி பழங்களை இயற்கையாகவும், சாறு பிழிந்து சாப்பிடும் போது அதில் சிறிது இந்துப்பு என்கிற பாறை உப்பு போட்டு கலக்கி அருந்த முறையற்ற மாதவிடாய் குறைபாடு நீங்கும், கருப்பை இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றும்.
மஞ்சள்
மஞ்சள் இயற்கையிலேயே ஒரு சிறந்த நோய் நிவாரணியாகும். இந்த மஞ்சளை சிறிது எடுத்து பால், தேன், நாட்டு சர்க்கரை போன்றவற்றில் கலந்து உண்ண குணம் கிடைக்கும்.
யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி
தினமும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு உடலின் நாளமில்லா சுரப்பிகள் சரியாக இயங்கி, அவற்றால் உடலின் தேவைகளுக்கேற்ற சுரக்கும் ஹார்மோன்களின் சமநிலை பராமரிக்கப்படுகிறது. எனவே எல்லா பெண்களும் முடிந்த வரை இதை பின்பற்ற வேண்டும்.