ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் இந்த தவறை செய்யவே செய்யாதீங்க! உங்களின் அழகு குறையும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யக்கூடாத தவறா? அது என்ன என்ற சிந்தனை எல்லோரது மனதிலும் எழும்? நம் எல்லோருக்கும் சில விஷயம் தெரிந்திருந்தாலும் கூட, சில தவிர்க்க முடியாத காரணத்தினால், செய்யக்கூடாத விஷயத்தைக் கூட, செய்யவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம். இதற்கு பரபரப்பான வாழ்க்கை சூழலும், நேரமின்மையும் தான் ஒரு காரணமாக இருக்கின்றது. எதுவாக இருக்கட்டுமே! நம்முடைய ஆரோக்கியத்திற்கு எது சரி, என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதன் பின்புதான் மற்ற வேலைகள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! இதை எல்லோரும் மறந்துவிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.
நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயத்தை முறைப்படி எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் எண்ணை குளியலை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரத்திற்கு எண்ணைக் குளியல், இரண்டு முறை அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால், நம்மில் பலர் வருடத்திற்கு ஒருமுறை, தீபாவளி அன்றுதான் எண்ணைக்குளியலையே நினைவுபடுத்துகிறோம்.
அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் ‘வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடுப்பது நல்லது என்று சொல்வார்கள். இந்தப் பழமொழி நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மருத்துவத்திற்கு அனாவசியமாக செலவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எண்ணெய் குளியலை முறையாக எந்த கிழமைகளில் எடுக்கவேண்டும்? ஆண்களாக இருந்தால் சனிக்கிழமையும், புதன்கிழமையும் தவறாமல் நல்லெண்ணெய் குளியல் எடுப்பது மிக அவசியம். ஏனென்றால் சனிக்கிழமை சனி கிரகத்திற்கும், புதன்கிழமை புதன் கிரகத்திற்கும் சாதகமாக சொல்லப்படுகிறது. எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாதநோய் இவைகள் வராமல் தடுப்பதற்காக தான் நம் முன்னோர்கள் ஆண்களை இந்த இரண்டு தினத்திலும் எண்ணை தேய்த்து குளிக்க சொல்லியிருக்கிறார்கள்.
பெண்களாக இருந்தால் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த இந்த தினத்தில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கபம், வாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று, பிறந்த தேதி அன்றும், பிறந்த கிழமை அன்றும் கட்டாயமாக எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கட்டாயம் எண்ணெய் குளியல் கூடவே கூடாது. ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
திருமணநாள், விரத நாட்களில் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. மாலை 5 மணிக்கு முன்பு தான் எண்ணெய் குளியல் போட வேண்டும். 5 மணிக்கு பிறகு கட்டாயம் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டாயம் விடுமுறை நாட்களாக இருக்கிறதே என்று சொல்லி எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. உங்களின் முகப்பொலிவு குறையும். வசீகரமும் குறைந்துவிடும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாகவே எண்ணை தேய்த்துக் குளித்தால் பகலில் தூங்கக் கூடாது என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லுவார்கள். எண்ணை தேய்த்து குளித்த நாளில், நம் உடம்பில் இருக்கும் சூடானது நம் கண்களின் மூலம் வெளியேறும். அந்த சமயம் கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தால் வெப்பம் வெளியேறாமல் உடம்புக்குள்ளேயே தங்கி பிரச்சினையை உருவாக்கி விடும் என்பதற்காகத்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது. வெயில் காலம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் எண்ணை தேய்த்து முறைப்படி குளித்து பாருங்கள். இதன் அருமை பெருமைகளை அனுபவித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.