இரவில் நன்கு தூக்கம் வர பாட்டி வைத்தியம்
40 வயதை கடந்த பலர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு குடும்ப சுமை, நோய் என பல காரணங்கள் உண்டு. ஒரு மனிதன் சராசரியாக குறைந்தது 8 மணி நேரம் இரவில் தூங்கினால் தான் அவன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு எளிதில் தூக்கம் வர சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலை நன்கு சுட வைத்து அதில் இரண்டு பல் பூண்டை போட்டு குடித்து வந்தால் இரவில் தூக்கம் வரும். அதோடு இதன் மூலம் செரிமான பிரச்சனைகள் தீருவதோடு உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கும்.
குறிப்பு 2 :
துளசி, வில்வம், மணலிக் கீரை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்கு காயவைத்து பொடி செய்து இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
குறிப்பு 3 :
தண்ணீரில் ஜீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு சிறிதளவு தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
குறிப்பு 4 :
வெள்ளை மிளகு, ரோஜாப்பூ, சுக்கு ஆகிய மூன்றையும் 50 கிராம் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
குறிப்பு 5 :
தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் மூன்று கப் அளவு தயிரை உட்கொண்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும். இதே போல வாழைப்பழமும் தூக்கமின்மை பிரதச்சனையை போக்கும். ஆகையால் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.