நாக சைதன்யா நடிகையுடன் பழகி வருவதைப் பற்றி சமந்தா உடைய கருத்து.
Samantha: பொதுவாக சினிமாவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் ஒரே ஜோடி நடித்தால் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி போன்ற தம்பதிகள் இப்போது வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாகர்ஜுனனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்றவுடன் விமர்சையாக தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் சமந்தா படங்களில் கவர்ச்சி காட்டுவது நாகர்ஜூன் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 2021 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சமீபத்தில் சமந்தாவுக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டபோது நாக சைதன்யா விசாரித்து இருந்தார். இந்நிலையில் சோபிதா துலிபாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்வதாக ஒரு தகவல்பரவி வருகிறது.
ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் வெளிப்படையாக எதுவும் தற்போது வரை சொல்லவில்லை. இப்போது சோபிதாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறாராம் நாக சைதன்யா. இந்த செய்தி பரவி வர சமந்தா எப்படி இதை எடுத்துப்பார் என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
அதாவது நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து பெற்ற போது தனக்கு ஜீவாம்சம் வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்போது நாக சைதன்யா சோபிதா உடன் பழகி வருவதைப் பற்றி நச்சென்று பதில் அளித்துள்ளார். அதாவது தான் அவரை விட்டு பிரிந்த நிலையில் இது பற்றி யோசிப்பது எனக்கு தேவையில்லாத ஒன்று.
இப்போது என்னுடைய கவனம் முழுவதும் படங்களில் தான் என்பது போல சமந்தா செயல்பட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடித்த குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் அடுத்த அடுத்த படங்களிலும் சமந்தா கமிட் ஆகி வருகிறாராம்.