Advertisement

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை | Actress Sadha Open Talk

தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.


Actress Sadha Open Talk


சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.


வேதனைப்படுகிறேன்!.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது.


இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் என்று சதா கூறியுள்ளார்.