லியோ
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். லலித் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மாபெரும் எதிர்பார்ப்பின் காரணமாக பிசினஸ் மட்டுமே ரூ. 434 கோடிக்கும் மேல் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், விஜய்யின் லியோ படத்திற்கு 4AM அதிகாலை காட்சி கிடைக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.
அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்
ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியுள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், "லியோ படத்திற்கு அதிகாலை 4AM காட்சி இல்லை. ரஜினியின் ஜெயிலர் படத்திற்கே கிடைக்கவில்லை".
"அதுவும் சன் பிச்சர்ஸ் அரசுக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த படத்திற்கே அதிகாலை 4AM மணி காட்சி கிடைக்கவில்லை. இதனால் லியோ படத்திற்கு காலை 11.30 மணி காட்சி தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது" என ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.