பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
காதல் ஜோடி: இதில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மணி சந்திராவுக்கும் ரவீணாவுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சோஷியல் மீடியாவில் பேச்சு அடிப்பட்டுள்ள நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இதில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள ரவீணா, மணிசந்திரா உள்ளே நுழைந்தவுடன் குடுகுடுவென ஓடி வந்து அவரை கட்டி அணைந்து வரவேற்றார். இது நிகழ்ச்சியைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சரியாக நோட் பண்ணி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காதல் ஜோடி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.