Advertisement

3 பேரை கார் வைத்து இடித்தாரா கேஜிஎஃப் நடிகை?.. சுத்துப் போட்டு அடிக்கும் ஊர் மக்கள்!

வயதான பெண் உட்பட மூன்று பெண்களை ரவீணாவும் அவரது கார் டிரைவரும் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தற்போது #RaveenaTandon என டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், ரவீனாவை பெண்கள் தாக்கும் பதை பதைக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று நடிகை தன்னை தற்காத்துக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போயுள்ளனர்.