கங்குவா படத்தில் வரலாற்று காட்சிகள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என இரண்டுமே இருக்கும் வகையில் கதை இருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவர இருக்கும் படம்தான் கங்குவா.
கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது படக்குழு. ஆனால், அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் உடன் சூர்யா மோதுவதால் பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.